அட சொல்லவே இல்ல.. அதுக்குள்ள அடுத்ததா?.. சந்தானத்தின் இங்க நான்தான் கிங் ஃபர்ஸ்ட் லுக்
சென்னை: நடிகர் சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இதனால் சந்தானம் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் அண்மையில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.
வடக்குப்பட்டி ராமசாமி: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனையொட்டி படத்திலிருந்து சில நொடிகள் ஓடக்கூடிய க்ளிம்ப்ஸ் காட்சி ஒன்று வெளியானது. அதில் சந்தானத்தை பார்த்து ஒருவர், கடவுள் இல்லைனு சொல்லிட்டு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்துனாரே அந்த ராமசாமியா நீ என்று கேட்கும்படி இருந்தது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டீசண்ட் வரவேற்பு: படமானது சமீபத்தில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் சந்தானத்துக்கு இந்தப் படம் ஹிட் வரிசையில் இணைந்துவிட்டதாகவும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சந்தானம் ஹேப்பி மோடில் இருக்கிறார். அடுத்தடுத்த படங்களையும் வெற்றி படங்களாக கொடுக்கும் முனைப்பிலும் இருக்கிறார்.
இங்க நான்தான் கிங்: இந்நிலையில் சத்தமே இல்லாமல் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துக்கு இங்க நான்தான் கிங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் கால் மேல் கால் போட்டு சந்தானம் அமர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அதுக்குள்ள அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்துடுச்சு. சந்தானம் கையில இன்னும் எத்தனை படங்கள் வைத்திருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இங்க நான்தான் கிங் படத்தை ஆனந்த் நாராயணன் இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











