Santhanam: அந்தப் படத்தில் காமெடியனாக நடிக்க விருப்பம்! கதாநாயகன் சந்தானம் சொன்ன ஹேப்பி நியூஸ்
சென்னை: நடிகர் சந்தானம் காமெடியனாக நடித்து, அதில் கோலோச்சி அதன் பின்னர் தன்னை படத்தின் கதாநாயகனாக மாற்றிக் கொண்டார். கதாநாயகனாக நடித்தாலும், ஒரு ஜனரஞ்சகமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார். சந்தானம் காமெடியனாக நடிப்பதை நிறுத்தியதில் இருந்து தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டது என விமர்சகர்கள் கூறுகின்றார்கள். இப்படியான நிலையில் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்ற கேரிக்கை ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது. ரசிகர்களின் கோரிக்கையை சந்தானம் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். அப்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
சந்தானத்தைப் பொறுத்தவரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். சின்னத்திரையில் இருந்த சந்தானத்தை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர், நடிகர் சிம்பு. தனது மன்மதன் படத்தின் மூலம் சந்தானத்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். இது மட்டும் இல்லாமல், சந்தானத்திற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை மற்ற நடிகர்கள், இயக்குநர்களிடமும் பேசி வாங்கிக் கொடுத்தார்.

இந்த நன்றிக்காகவே, சிம்பு தனது படத்தில் நடிக்க எப்போது அழைத்தாலும் சந்தானம், ஓ.கே சொல்லிவிடுவார். காமெடியனாக நடித்தது போதும், இனிமேல் நானே கதாநாயகனாக நடிக்கின்றேன் என முடிவெடுத்து இதுவரை ஜனரஞ்சகமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இப்படியான நிலையில்தான் சந்தானத்தைச் சந்தித்த சிம்பு, முழுக்க முழுக்க காமெடியனாக நடிக்க மாட்டேன் என ஏன் முடிவெடுத்தீர்கள்? எங்களுடன் அவ்வப்போது சில படங்களில் நடித்திருக்கலாமே எனக் கேட்டுள்ளார். அதற்கு, நான் எப்போதும் உங்களுடன் காமெடியனாக நடிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
சந்தானம்: இந்த ஆண்டு பொங்கலுக்கு மத கஜ ராஜா படம் ரிலீஸ் ஆன பின்னர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படியான நிலையில்தான் சந்தானம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது நிகழ்ச்சி ஒன்றில் சந்தானம் பேசுலையில், “ நான் என்னதான் இன்றைக்கு கதாநாயகனாக நடித்தாலூம், ஆர்யா போன்ற ஒரு நண்பனுக்காக பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் எப்போது தொடங்கினாலும் அதில் நான் தான் காமெடியன்.
காமெடியன்: இதற்கு காரணமே ஆர்யா தான். ஆர்யா போன்ற நண்பனுக்காக நான் இதைச் செய்கின்றேன். என்னை பலபேர் இரண்டு கதாநாயகர்கள் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க அழைத்தார்கள், சில படங்களில் ஜெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தார்கள். நான் எதற்கும் ஓ.கே. சொல்லவில்லை. ஆனால் ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 அல்லது வேறு எந்த படத்திற்கு என்னை அழைத்தாலும் நான் கட்டாயம் நடிப்பேன். காரணம் அந்த அளவுக்கு ஆர்யா எனது நண்பன், அவன் மீது எனக்கு அந்த அளவிற்கு நட்பு உள்ளது” என பேசியுள்ளார்.
கோரிக்கை: சந்தானத்தின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தையாவது எடுங்கள், சந்தானத்திற்காகவே அந்தப் படத்தை எடுங்கள் என இயக்குநர் ராஜேஸ்க்கு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











