ஜெயிலர் 2வில் நடிக்கிறீங்களா?.. அது என்ன கள்ளக்காதலா மறைத்து செய்ய?.. சந்தானம் கொடுத்த பளார் பதில்

சென்னை: காமெடி நடிகராக பயணத்தை ஆரம்பித்த சந்தானம்; தற்போது ஹீரோவாக மாறியிருக்கிறார். தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க மட்டுமே அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கும் சூழலில்; ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க சந்தானத்தை கமிட் செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியான சூழலில் அதுகுறித்து தற்போது தனது ஸ்டைலில் பதிலளித்திருக்கிறார்.

சிம்புவால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட சந்தானம்; கோலிவுட்டின் டாப் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர். கவுண்டமணி ஸ்டைலில் தனது காமெடியை டெலிவர் செய்தாலும் ஏதோ ஒரு வித்தியாசமும், அதில் சிரிக்கக்கூடிய விஷயங்கள் ஏராளமாக இருந்ததாலும் அவரது நகைச்சுவைகள் அசால்ட்டாக ஹிட்டடித்தன. ஒருகாலத்தில் எல்லாம் ஹீரோ இல்லாமல்கூட படங்கள் வரலாம்; சந்தானம் இல்லாமல் வரக்கூடாது என்ற நிலைமைதான் இருந்தது. அவரும் தனது காமெடியால் பல படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

ஹீரோவாக சந்தானம்: தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் கலக்கிவந்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் ஆசை கொண்டார். அதன்படி கதாநாயகனாக அறிமுகமான அவர் வரிசையாக படங்களில் நடித்து தள்ளுகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த பெரிய வெற்றி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. டிடி ரிட்டர்ன்ஸ், டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் மட்டும்தான் ஓரளவுக்கு அவருக்கு வரவேற்பை கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Santhanam Reacts to Rumors of Playing a Comedy Role in Rajinikanth s Jailer 2
Photo Credit:

அடுத்த படம்: கடைசியாக அவர் டிடி நெக்ஸ்ட் வெவல் படத்தில் நடித்திருந்தார். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் உருவானது. முதல் பாகம் பெற்ற வரவேற்பை போன்றே இதற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பெரிய இம்பேக்ட் எதையும் க்ரியேட் செய்யவில்லை. அடுத்ததாக ராஜேஷ் குமாரின் நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்படவிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில்தான் அதற்கான சந்திப்பு நடந்தது.

மீண்டும் காமெடி ரோலில்?: இது ஒருபக்கம் இருக்க சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு தகவல் வெளியானது. அதாவது ரஜினிகாந்த்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்று கூறப்பட்டாலும்; அது உண்மையா என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை.

சந்தானம் செய்தியாளர் சந்திப்பு: இந்நிலையில் நடிகரும் சந்தானத்தின் நண்பருமான நடிகர் சேது மறைவையடுத்து அவரது மனைவி புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இன்று அதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தானத்திடம், ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் காமெடி ரோல் ஏற்றிருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த சந்தானமோ, எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா மறைத்து செய்ய என கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X