கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சந்தானம் அறிவித்துள்ளார்.
சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி 2-ம் தேதி வெளியான அந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது என சந்தானம் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அந்த படத்தை தொடர்ந்து வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
இங்க நான் தான் கிங்கு ரிலீஸ் தேதி: சந்தானம் நடித்துள்ள இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் ஒரு மே மாதம் 10-ம் தேதி வெளியாகிறது என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது நடிகர் சந்தானம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து உடனுக்குடன் படங்களை ரிலீஸ் செய்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் சந்தானம்.
கவின் உடன் கிளாஷ்: வரும் மே 10 ஆம் தேதி இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அதே தேதியில் நடிகர் சந்தானமும் தனது படத்தை வெளியிட உள்ளார். இந்த முறை கவினுடன் சந்தானம் மோத முடிவு செய்து விட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
யாரு கிங்கு?: சந்தானத்தின் ' இங்கு நான் தான் கிங்கு' படம் மற்றும் கவின் அடித்துள்ள ' ஸ்டார்' என இரு படங்களும் மே 10 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அவர்கள் இருவரில் யாருக்கு இங்கு என 10ம் தேதி தெரிந்துவிடும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சந்தானத்தை போலவே கவினும் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரன் என்ன ஆச்சு?: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தின் டீசர் எல்லாம் வெளியான நிலையில், தேர்தல் முடிந்தும் இன்னமும் அந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் ராஜ்கமல் நிறுவனம் வெளியிடவில்லையே ஏன் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











