»   »  இதுவல்லவோ வளர்ச்சி: கவுதம் மேனன் படத்தில் ஜெயம் ரவிக்கு பதில் சந்தானம் ஹீரோவாம்!

இதுவல்லவோ வளர்ச்சி: கவுதம் மேனன் படத்தில் ஜெயம் ரவிக்கு பதில் சந்தானம் ஹீரோவாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவுதம் மேனனின் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு பதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று பேசப்படுகிறது.

கவுதம் மேனன் சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை துவங்கி முடிக்க முடியாமல் திணறுகிறார். சிம்புவின் கால்ஷீட் பிரச்சனை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை துவங்கிவிட்டார் கவுதம்.

இந்நிலையில் கவுதம் தனது அடுத்த பட வேலைகளையும் துவங்கிவிட்டார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

தனுஷை அடுத்து கவுதம் ஜெயம் ரவியை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. அந்த படத்தில் புனீத் ராஜ்குமார், பஹத் பாசில் அல்லது ப்ரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படத்தில் அனுஷ்கா, தமன்னா உள்பட 3 ஹீரோயின்கள்.

சந்தானம்

சந்தானம்

ஜெயம் ரவி மிகவும் பிசியாக இருப்பதால் அவருக்கு பதில் சந்தானத்தை ஹீரோவாக்க முடிவு செய்துவிட்டாராம் கவுதம். படத்தின் கதை சந்தானத்திற்கு தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை ஹீரோவாக்கியுள்ளதாக கவுதமின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன்

செல்வராகவன்

சந்தானம் செல்வராகவன் இயக்கத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர சந்தானம் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் படத்திலும் நடிக்கிறார்.

ஆக்ஷன்

ஆக்ஷன்

சிக்ஸ் பேக் வைத்து ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்த முடிவு செய்துள்ளார் சந்தானம். இது தவிர இனி டான்ஸும் நச்சுன்னு ஆட வேண்டும் என தீர்மானித்துள்ளாராம். நடத்துங்க நடத்துங்க சந்தானம்.

English summary
Buzz is that Santhanam replaced Jayam Ravi in Gautham Menon's upcoming film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil