Santhanam - நீங்கள் சங்கியா.. பத்திரிகையாளர் கேட்ட கேள்வி.. சந்தானம் சொன்ன அதிரடி பதில்

சென்னை: நடிகர் சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இதனால் சந்தானம் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது அவர் இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

Santhanam replied to the question Are you Sanghi here are the full details

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் அண்மையில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.

வடக்குப்பட்டி ராமசாமி: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனையொட்டி படத்திலிருந்து சில நொடிகள் ஓடக்கூடிய க்ளிம்ப்ஸ் காட்சி ஒன்று வெளியானது. அதில் சந்தானத்தை பார்த்து ஒருவர், கடவுள் இல்லைனு சொல்லிட்டு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்துனாரே அந்த ராமசாமியா நீ என்று கேட்கும்படி இருந்தது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டீசண்ட் வரவேற்பு: படமானது சமீபத்தில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் சந்தானத்துக்கு இந்தப் படம் ஹிட் வரிசையில் இணைந்துவிட்டதாகவும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். சந்தானமும் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் சந்தானத்தை பார்த்து நீங்கள் சங்கியா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சந்தானம், நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்தேன். அவர் பெய்ர் சங்கீதா. அவரை நான் சங்கி என்று செல்லமாக கூப்பிடுவேன். அதற்கு அவர் சங்கியாகிவிடுவாரா என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு சென்றார்.

கடவுள் நம்பிக்கையை வைத்து படம் பார்க்க வேண்டாம்: முன்னதாக படத்தின் வெற்றி விழாவில் பேசியிருந்த சந்தானம், ஆத்திகராக பார்த்தால் இது சாமி படம். நாத்திகராக பார்த்தால் இது பகுத்தறிவு பேசும் படம். கடவுள் நம்பிக்கையை வைத்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்பதையும்; கடவுள் பெயரை வைத்து அரசியலும் பண்ண வேண்டாம் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது.

நான் ஆன்மீகவாதிதான். எங்களது கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. காமெடியும் சிரிப்பும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. அடுத்த படமும் இந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். அதற்கும் கவுண்டமணி வசனத்தையே தலைப்பாக வைத்திருக்கிறோம்" என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X