கணவரை கலாய்த்தது பிடிக்கவில்லை.. புலம்பிய தேவயானி.. சந்தானம் சொல்லியிருக்கும் பதில் என்ன தெரியுமா?

சென்னை: சந்தானம் நடிப்பில் நாளை மறுநாள் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆர்யா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் கௌதம் மேனன், செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இரண்டாவது பாகத்தின் மீதும் பெரிய நம்பிக்கையை படக்குழுவினர் வைத்திருக்கிறார்கள். முக்கியமாக ஹீரொவாக வெற்றி பெற்று சில காலம் ஆகிவிட்டதால் இந்தப் படத்தில் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்று முழு முனைப்பில் வேலை செய்திருக்கிறாராம் சந்தானம். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாகக் கொண்ட சந்தானம் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில்தான் முதன்முறையாக தலையை காண்பித்தார். ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு சின்ன சின்ன வேடங்களே கொடுக்கப்பட்டன. ஆனால் நாளாக நாளாக சந்தானத்தின் திறமையை தெரிந்துகொண்ட நிகழ்ச்சியின் இயக்குநர் ராம் பாலா சந்தானத்துக்கு அதிக ஸ்பேஸ் கொடுத்தார். தனக்கு கிடைத்த ஸ்பேஸை சரியாக பயன்படுத்திக்கொண்டு ஒவ்வொரு எபிசோடிலும் ரவுண்டு கட்டி அடித்தார். இதனால் சின்னத்திரை உலகில் அவர் வெகு பிரபலமாகிவிட்டார். அதனையடுத்து சந்தானத்தின் திறமையை கண்ட சிம்பு உடனடியாக தனது மன்மதன் படத்தில் நடிக்க கமிட் செய்தார். அதன் மூலம் வெள்ளித்திரைக்கும் வந்துவிட்டார் நடிகர் சந்தானம்.

செம பீக்: மன்மதன் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை சிறப்பாக செய்தார். அந்தப் படத்துக்கு பிறகு சிம்புவே மற்றவர்களின் சில படங்களில் நடிக்க சந்தானத்தை ரெஃபர் செய்த கதையெல்லாம் உண்டு. தொடர்ந்து கடுமையாக உழைத்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வித்தியாச காமெடிகளை செய்ய ஆரம்பித்தார். இருந்தாலும் அவர் அப்படியே கவுண்டமணி ஸ்டைலை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. அதுமட்டுமின்றி இப்படியே அடுத்தவரின் ஸ்டைலை ஃபாலோ செய்தால் கண்டிப்பாக சந்தானத்தால் நீண்ட வருடங்கள் நிலைக்கவே முடியாது என்றும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் கவுண்டமணி ஸ்டைலில் கவுண்ட்டர் அடித்தாலும் அதில் தன்னுடைய இன்புட்ஸை தொடர்ந்து போட்டுக்கொண்டே வந்தார். குறிப்பாக காலத்துக்கு தகுந்தவாறு காமெடிகளை செய்தார். இதனால் அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது.

Santhanam responded to Devayani s remarks in an interview

சர்ச்சைகள் சந்தித்த சந்தானம்: குறுகிய காலத்திலேயே சந்தானம் பீக்கிற்கு சென்றுவிட்டார். ஒருவர் அதீத வளர்ச்சி அடைந்தாலே அவரை சுற்றி சர்ச்சைகளும் விமர்சனங்களும் வளரும் என்பதுதான் பொதுவான விதி. அதேபோல்தான் சந்தானத்தை சுற்றியும் வளர்ந்தன. காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் அடுத்தவரை மட்டமாக பேசுகிறார், உருவ கேலி செய்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பெண் நடிகையிடம் அவர் பேசிய வசனம் பெரிய சர்ச்சைகளை உருவாக்கியது. அதனையடுத்து அந்த வசனம் மாற்றப்பட்டது. இப்படி சில சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தாலும் அவரது காமெடியை ரசிப்பதற்கென்று ஒருகூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

ஹீரோ சந்தானம்: காமெடியனாக கலக்கிக்கொண்டிருந்த அவர் திடீரென ஹீரோவாக அறிமுகமானார். விஜய் டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் வெற்றிகரமான ஹீரோவாக இருக்கிறார்; ஏன் நம்மால் முடியாது என்ற எண்ணத்தில்தான் அவர் ஹீரோவாகும் முடிவை எடுத்ததாக கூறப்படுவதுண்ட். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில்தான் முதன்முதலில் சந்தானம் சோலோ ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் தோல்வியையே சந்தித்தன. தனக்கு கம்ஃபோர்ட் ஸோனான காமெடி கதைகளையே அவர் தேர்ந்தெடுத்தாலும் பெரிதாக அவருக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. டிக்கிலோனா, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே ஒரு ஹீரோவாக சந்தானத்துக்கு நிம்மதியை கொடுத்தது.

டிடி நெக்ஸ்ட் லெவல்: கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த இங்க நான்தான் கிங்கு திரைப்படமும் தோல்விப்படமாகவே அமைந்துவிட்டது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாவது பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்திருக்கிறார். இதில் கௌதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ஆர்யா இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் எப்படி தனக்கு ஒரு வெற்றியை கொடுத்ததோ அதேபோல் இரண்டாவது பாகமும் ஒரு ஹீரோவாக தனக்கு ஒரு வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர். படமானது நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

Santhanam responded to Devayani s remarks in an interview

தேவயானி பேட்டி: இதற்கிடையே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் நடித்தபோது சந்தானம் தனது கணவரை கலாய்த்தது சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதுகுறித்து அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், "எனது கணவரை சந்தானம் பயங்கரமாக கிண்டலடித்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. என்னுடைய கணவர் சந்தானத்தின் படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்திருந்தது. ஆனால் இந்த விஷயமெல்லாம் எனக்கு தெரியவில்லை. இதுவரை நான் அந்தப் படத்தை பார்க்கவும் இல்லை. சந்தானம் அப்படி செய்தது எனக்கு உண்மையில் வருத்தம்தான்" என்று ஓபனாகவே பேசியிருந்தார். தேவயானியின் அந்தப் பேட்டி பயங்கரமாக ட்ரெண்டானது. மேலும் இப்படித்தான் ஓபனாக பேச வேண்டும் என்றும் பலர் சொன்னார்கள்.

சந்தானத்தின் பதில்: இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக இருக்கும் சந்தானம் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தேவயானி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அந்தப் படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசும்போதே, 'இது பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர்தான். அந்த கேரக்டர் வயதுக்கு மீறி ஒன்று செய்யும். ஒரு பாயிண்ட்டில் நாங்கள் எல்லாம் சேர்ந்து உங்களை பயங்கரமாக கலாய்ப்போம்' என்று சொன்னோம். அவரும் வசனங்கள், கதை என அனைத்தையும் படித்துவிட்டுதான் ஓகே என்று சொன்னார். அந்த சீனில் பார்த்தீர்கள் என்றால் முதலில் அவர் என்னை கலாய்த்துக்கொண்டே இருப்பார்.

முதலில் சொல்லிவிடுவோம்: யாராக இருந்தாலும் சரி முதலில் நாங்கள் ஸ்க்ரிப்ட், வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேயா என்று கேட்டுவிட்டுத்தான் நடிப்போம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கலர் கலராக ட்ரெஸ் போட்டிருப்பேன். அதை பார்த்து என் வீட்டில்கூட என்ன இது இப்படியும் ஒருத்தன் இருப்பானா என்று என்னிடம் கேட்டார்கள். நடிப்பு என்பது ஒரு கேரக்டர் என்ன செய்யுமோ அதைத்தானே செய்ய முடியும். அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்கூட தன்னை ஒரு குள்ளமான கமலாகத்தானே காட்டியிருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X