நாளை வெளியாகும் சந்தானம் படம்.. ஸ்னீக் பீக்கை வெளியிட்ட படக்குழு!

சென்னை : நடிகர் சந்தானம் சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரது ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள இநத்ப படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நாளைய தினம் படம் ரிலீசாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழு இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று தெரிவித்துள்ளனர்.

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் டிவியில் சிறப்பான நிகழ்ச்சிகளில் தோன்றி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். அதன்மூலம் தமிழ் சினிமாவில் தனது காமெடி பயணத்தை துவக்கிய சந்தானம், தொடர்ந்து ஏராளமான படங்களில் ஹீரோக்களுக்கு இணையான ரோல்களில் காமெடியில் அதகளம் செய்தவர். இவரது காமெடிக்காகவே பல படங்கள் வெற்றிப் படங்களாக மாறிய வரலாறும் உண்டு.

சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்

சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்

தொடர்ந்து பல காமெடிப் படங்களில் நடித்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் முடிவை எடுத்து தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மாறினாலும் தன்னுடைய காமெடி கலாட்டாவை விட்டுவிடாமல் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வருகிறார். இதனிடையே இவரது நடிப்பில் ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ற படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம்

பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம்

இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ஏஜெண்ட் சீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கி தயாரித்துள்ளார் மனோஜ் பீதா. இந்தப் படம் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் படம் ரிலீசாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டனர்.

நகைச்சுவையை தவிர்த்த சந்தானம்

நகைச்சுவையை தவிர்த்த சந்தானம்

இந்த சந்திப்பில் சந்தானம், ரியா சுமன், புகழ், இயக்குநர் மனோஜ் பீதா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மனோஜ் பீதா, இந்தப் படத்தில் அதிகமான நகைச்சுவை இருக்கக்கூடாது என்பதில் நடிகர் சந்தானம் உறுதியாக இருந்ததாகவும், தான் நினைத்ததை இந்தப் படத்தில் சந்தானம் சாதித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

காமெடி தளத்தில் 4 படங்கள்

காமெடி தளத்தில் 4 படங்கள்

தொடர்ந்து பேசிய சந்தானம், இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்துள்ளதாகவும், கவுன்டர் காமெடியை தவிர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீரியஸ் கதைக்களத்தில் இருந்து விலகி, வழக்கமான தனது காமெடி பார்முலாவில் அடுத்தடுத்து 4 படங்களை செய்யவுள்ளதாகவும் சந்தானம் தெரிவித்தார். அதை தொடர்ந்து மீண்டும் சீரியஸ் படங்களில் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

நல்ல படங்கள் ஓடும்

நல்ல படங்கள் ஓடும்

தெலுங்கில் வாரிசு படத்தின் ரிலீஸ் குறித்த பிரச்சினை குறித்து பேசிய சந்தானம், நல்ல படங்கள் நன்றாக ஓடும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் ரிலீசையொட்டி, படத்தின் அடுத்தடுத்த ஸ்னீக் பீக் காட்சிகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ரசிகர்களை கவரும் வகையில் இந்த காட்சிகள் அமைந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X