விஷாலின் 'சக்ரா'வை தொடர்ந்து.. தீபாவளிக்கு ரிலீஸாகிறது சந்தானத்தின் பிஸ்கோத்.. தியேட்டரா, ஓடிடியா?

By

சென்னை: சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள பிஸ்கோத் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இயக்குனர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் படம், பிஸ்கோத். இவர், ஏற்கனவே சில படங்களை இயக்கி இருக்கிறார்.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

தாரா அலிஷா பெர்ரி

தாரா அலிஷா பெர்ரி

பிஸ்கோத் படத்தில் சந்தானம் 3 தோற்றங்களில் நடித்துள்ளார். அவர் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா நடித்துள்ளனர். தாரா அலிஷா பெர்ரி, ஏ 1 படத்தில் ஏற்கனவே சந்தானம் ஜோடியாக நடித்தவர். மற்றும் சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒன்றரை கோடி அரண்மனை

ஒன்றரை கோடி அரண்மனை

இதன் விநியோக உரிமையை கே.ரவீந்திரன் பெற்றுள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இதன் ஷூட்டிங், சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்துள்ளது. ஐதராபாத் அருகே சுமார் ஒன்றரை கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைத்து அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

டிஷ்யூம் டிஷ்யூம்

டிஷ்யூம் டிஷ்யூம்

பழங்கால அரண்மனை செட்டில் நடந்த படப்பிடிப்பில் சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர். 80-களில் நடப்பது போலவும் பீரியட் மற்றும் இப்போது நடப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கால கட்டத்தில் வரும் சினிமா சண்டைகள் போல, இதில் டிஷ்யூம் டிஷ்யூம் பின்னணியில் சந்தானம் நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

டிஜிட்டல் வெளியீடு

டிஜிட்டல் வெளியீடு

இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படம் எப்போதோ முடிந்துவிட்டது என்றாலும், கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில தயாரிப்பாளர்கள் படத்தை டிஜிட்டலில் வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படமும் டிஜிட்டலில் வெளியாகும் என்று தெரிகிறது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

ஓடிடி தளத்தில் வெளியாகிறதா, தியேட்டர் திறக்கப்பட்டதும் அதில் வெளியாகிறதா என்பது பற்றி விநியோகஸ்தர் ரவீந்திரன் முடிவு செய்கிறார். சில ஓடிடி தளங்களிலும் பேசி வருகின்றனர். இதற்கிடையே இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி என்று படக்குழு கூறியுள்ளது. விஷாலின் சக்ரா படமும் ஓடிடியில் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X