சூர்யா தயக்கம்.. சந்தானம் ரெடி.. ஏப்ரலில் களமிறங்கும் பிஸ்கோத்.. தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகாது என்ற தகவல்கள் சூர்யா ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.
Recommended Video
இந்நிலையில், சந்தானத்தின் பிஸ்கோத் திரைப்படம் ஏப்ரல் ரிலீஸ் என்ற அறிவிப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி பட்டையை கிளப்புகிறது.
ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் திரைப்படத்தின் வித்தியாசமான லுக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ரவுண்டு கட்டுகிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகனாக கலக்கிய சந்தானம், ஹீரோ அவதாரம் எடுத்துள்ள நிலையில், வரிசையாக படங்களை நடித்து தள்ளி வருகிறார். கடந்த மாதம் வெளியான சந்தானத்தின் டகால்டி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யாத நிலையில், வரும் ஏப்ரலில் பிஸ்கோத் உடன் வருகிறார் சந்தானம்.

ஹர்பஜன் சிங்குடன்
இயக்குநர் கார்த்தி யோகி இயக்கத்தில் சந்தானம் முதன் முறையாக மூன்று வேடத்தில் நடித்துள்ள டிக்கிலோனா படமும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் படு பிஸியாக இயங்கி வருகிறது. சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த சந்தானம், பிஸ்கோத் படத்தின் ரிலீசுக்கான முயற்சியில் இறங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், முதன்முறையாக சந்தானத்துடன் இணைந்து டிக்கிலோனா ஆட உள்ளார்.

அந்த படம் என்னாச்சு?
டகால்டி படத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் சில பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு தள்ளிப் போன சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படம் காதலர் தினத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. எப்போது தான் சுந்தரம் சர்வ் பண்ண வருவாரோ தெரியவில்லை.

ஏப்ரல் மாதத்தில்
இதுவரை ஏப்ரல் மாதத்தில் விஜய்யின் மாஸ்டர் படம் மட்டுமே வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் மே 1 ரிலீசாகும் என தகவல்கள் சமீபத்தில் வெளியாகி, சூர்யா ரசிகர்களை அப்செட் ஆக்கியது. இந்நிலையில், சந்தானத்தின் பிஸ்கோத் திரைப்படம் தைரியமாக ஏப்ரலில் வெளியாகிறது.
வித்தியாசமான கெட்டப்
பழைய படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி கெளபாய் கெட்டப்பில் வருவது போல, வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் சந்தானத்தின் பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் சிரிப்பு வெடியை கட்டவிழ்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டைல்
பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என நடிகர் ஆர்யாவுடன் பல படங்களில் காமெடியில் கலக்கி உள்ள சந்தானத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ஆர்யா, சூப்பர் ஸ்டைல், சூப்பர் ஃபன் ஃபர்ஸ்ட் லுக் டார்லிங் என சந்தானத்திற்கும், இயக்குநர் கண்ணனுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

யார் ஹீரோயின்
ஆர். கண்ணன் தயாரித்து இயக்கி வரும் சந்தானத்தின் பிஸ்கோத் படத்தில், நாயகியாக தாரா அலிஷா பெர்ரி நடித்துள்ளார். சந்தானத்தின் ஏ1 படத்தில் ஹாஃப் பாயில் சாப்பிடும் அய்யர் ஆத்து பொண்ணாக நடித்த தாரா அலிஷா பெர்ரி, மீண்டும் சந்தானத்துக்கு ஜோடியாக பிஸ்கோத் படத்தில் கூட்டணி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











