100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா? பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்!

சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் படம் பிஸ்கோத். இந்தப் படம் நடிகர் சந்தானத்தின் 400வது படம் ஆகும்.

இந்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம், மன்னர் வேடத்திலும் வருகிறார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயராக உள்ளது.

 பல நடிகர்கள்

பல நடிகர்கள்

இந்த படத்தில் தாரா அலிஷா பெரி மற்றும் சுவாதி முப்பாலா ஆகியோர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சௌகார் ஜானகி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மன்னரின் கதை

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பாகுபலி படத்தின் சில சீரியஸான காட்சிகளையும் வசனங்களையும் காமெடியாக ஃபாலோ செய்துள்ளனர். அதாவது சவுகார் ஜானகி 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த மன்னரின் கதையை சொல்வது போல் தொடங்குகிறது ட்ரெயிலர்.

 10 உயிரையாவது பலி கேட்காதா?

10 உயிரையாவது பலி கேட்காதா?

அதில் பாகுபலி படத்தின் பல்வால் தேவன் போல் நடித்துள்ளார் ஆனந்த்ராஜ். தனக்குதானே கட் அவுட் வைக்கிறார். அப்போது பாகுபலி ஸ்டைலில் 100 அடி உயர கட் அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா என வசனம் பேசுகிறார்.

 டைமிங் டயலாக்

டைமிங் டயலாக்

கட்டப்பா கெட்டபில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல், மாஸ்க் கட்ட வேண்டும் என்று கரண்ட் அஃபையரில் வெளுத்து வாங்கும் சந்தானம், தனக்கே உரிய பாணியில் டைமிங் டயலாக் டெலிவரி பட்டைய கிளப்பியிருக்கிறார்.

 ஓசி ஐடி வச்சுருக்க திமிரா?

ஓசி ஐடி வச்சுருக்க திமிரா?

குறிப்பாக திரையரங்குகள் திறக்க லேட்டானால் என்ன செய்வதென்று நடிகர் ஆனந்த்ராஜ் கேட்க, பாதுகாவலராக இருக்கும் லொள்ளு சபா மனோகர் OTTதான் என்று கூற சப்பென ஒன்று வைத்து ஓசி ஐடி வைத்திருக்கும் திமிரா என கேட்டு படம் திரையரங்கில்தான் ரிலீஸ் ஆகும் என இன்டைரக்ட்டாக தெரிவித்துள்ளனர்.

 பில்லா பெட்டி சீன்

பில்லா பெட்டி சீன்

12 ஆம் நூற்றாண்டு கதையில் மன்னராகவும் தற்போதைய கால கட்டத்தில் பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்ப்பவராகவும் நடித்துள்ளார் சந்தானம். பாகுபலி மட்டுமின்றி ஹாலிவுட் படங்கள் மற்றும் பில்லா படத்தின் பெட்டி சீனையும் வைத்து காமெடி செய்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெயிலரே சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் பட்டைய கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X