கொரோனா தீபாவளி.. சந்தானத்தின் பிஸ்கோத் முதல் இரண்டாம் குத்து வரை.. இவ்ளோ படங்கள் தியேட்டரில் ரிலீஸ்

By

சென்னை: கொரோனா தீபாவளியாகிப் போன இந்த வருடம், 7 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன.

கொரோனா லாக்டவுன் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள், 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 10 ஆம் தேதி திறக்கப்பட்டன.

50 இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என்று அரசு விதித்த நிபந்தனையோடு இந்த தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

அஜித்தின் விஸ்வாசம்

அஜித்தின் விஸ்வாசம்

விபிஎப் பிரச்னை காரணமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால், ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களான ரஜினி நடித்த சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்தின் விஸ்வாசம், தனுசின் அசுரன், தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் திரையிடப்பட்டன.

எம்.ஜி.ஆர், சிவாஜி

எம்.ஜி.ஆர், சிவாஜி

சில தியேட்டர்களில், எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் கொரோனா பயம் காரணமாக, ரசிகர்கள் அதிக அளவு தியேட்டருக்கு வரவில்லை. கூட்டம் குறைவாக இருந்தது. ரசிகர்கள் வராததால் மொத்தமுள்ள 1,140 தியேட்டர்களில் 800 தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

கட்டணத்தில் தள்ளுபடி

கட்டணத்தில் தள்ளுபடி

இதனால் தியேட்டர் அதிபர்களுக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் க்யூப் நிறுவனம், விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. இந்த தள்ளுபடி அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் நவம்பர் மாதம் முழுவதற்கும் பொருந்தும் என்று அறிவித்தது.

தட்றோம் தூக்குறோம்

தட்றோம் தூக்குறோம்

இதனால் தீபாவளிக்குப் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. விபிஎப் பிரச்னையில் தற்காலிகத் தீர்வு ஏற்பட்டதால் தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. சுமார் 7 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன. ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் 3 கெட்டப்புகளில் நடித்துள்ள பிஸ்கோத், சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து, தட்றோம் தூக்குறோம், மரிஜுவானா, பச்சைக்கிளி, கோட்டா, நுங்கம்பாக்கம் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ் ஆகின்றன.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

இதுமட்டுமின்றி, ஓடிடியில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. பிரசன்னா, ஷாம் நடித்துள்ள, நாங்க ரொம்ப பிசி படம் சன் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது. புதிய படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் அதிகமாக தியேட்டருக்கு வருவார்கள் என்று தியேட்டர் உரிமையாளர்கள் நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X