இதென்ன டகால்டி? ஒரே நாளில் சந்தானத்தின் 2 படங்கள் ரிலீஸா? அவசரமாக நடக்கிறது அதிரடி பஞ்சாயத்து

By

சென்னை: சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டகால்டி படமும் சர்வர் சுந்தரம் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் விஜய் ஆனந்த். இவர் இயக்கியுள்ள படம், டகால்டி. இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவர் ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். ராதாரவி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

சொந்த தயாரிப்பு

சொந்த தயாரிப்பு

இந்தப் படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் நரேன் இசையமைத்துள்ளார். சந்தானத்தின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

சர்வர் சுந்தரம்

சர்வர் சுந்தரம்

இந்த படம் வரும் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயின்.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதா ரவி, செஃப் தாமோதரன் உட்பட பலர் நடித்துள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பைனான்ஸ் பிரச்னை

பைனான்ஸ் பிரச்னை

படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஒரே நாளில் 2 படங்கள்

ஒரே நாளில் 2 படங்கள்

சந்தானம் நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வரும் 31 ஆம் தேதி சந்தானத்தின் ஏதாவது ஒரு படம்தான் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X