சந்தானத்தின் டகால்டி இன்று ரிலீஸ்.. சேலத்தில் டிஜிட்டல் கட்-அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்!

Recommended Video

Dagaalty Public Opinion | Santhanam | Rithika Sen | Yogi Babu

சென்னை: சந்தானத்தின் டகால்டி படம் இன்று ரிலீஸ் ஆவதை முன்னிட்டு சேலத்தில் டிஜிட்டல் பேனர் வைத்து ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென் நடிப்பில் உருவாகியுள்ள டகால்டி படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

சந்தானத்தின் ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் எஸ்.பி. செளத்ரியின் 18 ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிஜிட்டல் கட்-அவுட்

ஷங்கரின் உதவி இயக்குநரான விஜய் ஆனந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தானம் மற்றும் யோகிபாபுவின் காமெடி காம்பினேஷனில் தியேட்டர்கள் அதகளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சேலத்தில் உள்ள சந்தானம் ரசிகர்கள், டகால்டி படத்தின் ரிலீஸை வேற லெவலில் கொண்டாட முடிவு செய்து சாதாரண பேனர், கட்-அவுட் வைக்காமல், டிஜிட்டல் கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

கர்நாடகாவில்

காமெடியனாக இருந்து ஹீரோவாக வளர்ந்திருக்கும் சந்தானத்திற்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வட்டம் பெருகி வருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் இன்றி கர்நாடகாவிலும் சந்தானத்திற்கு ரசிகர்கள் வட்டம் பெருகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சந்தானம் ரசிகர்கள் சந்தானம் புகைப்படம் போட்ட பூந்தொட்டிகளை ரசிகர்களுக்கு பரிசாக அளித்து வருகின்றனர்.

வசூல் குவிக்கும்

வசூல் குவிக்கும்

கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 2 மற்றும் ஏ1 படங்கள் வசூலை வாரி குவித்த நிலையில், இந்த ஆண்டு துவக்கத்திலேயே ரிலீசாகியுள்ள டகால்டி படமும் சந்தானத்துக்கு வசூலை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை முதலே தியேட்டர்களில் சந்தானம் ரசிகர்கள் FDFS கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

தர்பார் கனெக்‌ஷன்

தர்பார் கனெக்‌ஷன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படம் முழுக்க முழுக்க மும்பை மற்றும் வட மாநிலங்களில் எடுக்கப் பட்டதை போல, சந்தானத்தின் டகால்டி படமும் மும்பை மற்றும் வட மாநிலங்களில் அதிகளவில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. பெங்காலியில் பாப்புலரான நடிகை ரித்திகா சென் சந்தானத்துக்கு ஜோடியாக தமிழில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X