ஒரே நாளில் 2... சந்தானம் பட ரிலீஸ் பிரச்னை... 'டகால்டி' கன்பர்மாம்... 'சர்வர் சுந்தரம்' டவுட்டாமே!
சென்னை: சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டகால்டி படம் வரும் 31 ஆம் தேதி வெளிவருவது உறுதி என்று அதன் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் விஜய் ஆனந்த். இவர் இயக்கியுள்ள படம், டகால்டி. இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.
அவர் ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். ராதாரவி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹேண்ட்மேட் பிலிம்ஸ்
இந்தப் படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் நரேன் இசையமைத்துள்ளார். சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

சர்வர் சுந்தரம்
இந்த படம் வரும் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது.

வைபவி சாண்டில்யா
இதை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயினாக நடித்துள்ளார். நாகேஷ் பேரன் பிஜேஷ், ராதாரவி உட்பட பலர் நடித்துள்ளனர். கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதா ரவி, செஃப் தாமோதரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பைனான்ஸ் சிக்கல்
கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் பைனான்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் வரும் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரே நாளில்
சந்தானம் நடித்துள்ள இரண்டு படங்கள், ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

டகால்டி கன்பர்ம்
சர்வர் சுந்தரம் படத்துக்கு அதிக பிரச்னை இருப்பதாலும் அவர்கள் அடிக்கடி ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு பிறகு பின் வாங்கிவிடுவதாலும் அதன் ரிலீஸ், சந்தேகம் என்கிறார்கள். அதே நேரம், டகால்டி 31 ஆம் தேதி வெளிவருவது உறுதி என்று அந்தப் படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











