செம்ம கவுன்ட்டர்.. சந்தானம், யோகி பாபு சரவெடி காமெடியில் டகால்டி டீஸர் ரிலீஸ்!
சென்னை: சந்தானத்தின் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் இணைந்து தயாரிக்கும் டகால்டி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, மனோ பாலா, தருண் அரோரா மற்றும் சந்தான பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட டகால்டி டீஸர் 4.15 மணிக்கு முன்கூட்டியே வெளியாகும் என நடிகர் சந்தானம் அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.
செம்ம கவுன்ட்டர்
சந்தானம் படம் என்றாலே காமெடிக்கும் கவுன்ட்டர் வசனங்களுக்கும் பஞ்சமிருக்காது. தற்போது வெளியாகியுள்ள டாகால்டி டீஸரிலும் அது நிறைவாகவே இருக்கிறது. நாயகி ரித்திகா சென், தன்னுடைய எய்மே அஜித் அல்லது விஜய்யை வைத்து படம் பண்ணுவது தான் என சொல்ல, அப்போ, அட்லியும் சிறுத்தை சிவாவும் யாரை வைத்து படம் பண்ணுவார்கள் என செம்ம கவுன்ட்டர் கொடுக்கிறார்.

எனர்ஜி
ஷங்கரின் உதவி இயக்குநரான விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டகால்டி படத்தில் பிரம்மாண்டமும் அதிக அளவிலான எனர்ஜியும் நன்றாகவே தெரிகிறது. ரொம்பவும் யங்காக, மாஸாக சந்தானம் இறங்கி நடித்துள்ளார் என்பது டீஸரை பார்த்தாலே தெரிகிறது.
சந்தானம் – யோகி பாபு காம்போ
தமிழ் சினிமாவில் சந்தானம் விட்டுச் சென்ற காமெடி சிம்மாசனத்தில் தற்போது யோகி பாபு தான் அமர்ந்துள்ளார். இந்நிலையில், அதனை பிரதிபலிக்கும் வகையில் டீஸரில் இடம் பெற்றுள்ள வசனம் சந்தானம் மற்றும் யோகி பாபு ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது.
சாதாரணமா நினைக்காத
டீஸர் முழுவதும் சந்தானத்தின் கவுன்ட்டர் பஞ்ச் வசனங்கள் இந்த முறை வேற லெவலில் ஒர்க்கவுட் ஆகியுள்ளன. ஒவ்வொரு வசனத்தையும் ரசிகர்கள் தனித்தனியாக கவனித்து கொண்டாடி வருகின்றனர். ரித்திகா சென்- அவன சாதாரணமா நினைக்காத, சந்தானம்- அப்ப surf exel போட்டு நினைக்கவா என்ற கவுன்ட்டர் பஞ்ச்சை இந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications