பொங்கல் முடிஞ்சு... வரும் 31-ல் ரிலீஸ் ஆகிறது சந்தானத்தின் காமெடி டகால்டி
சென்னை: நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டகால்டி படம் வரும் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் விஜய் ஆனந்த். இவர் இயக்கியுள்ள படம், டகால்டி. இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார்.
அவர் ஜோடியாக ரித்திகா சென் நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் ராதாரவி நடித்துள்ளார். யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹேண்ட்மேட் பிலிம்ஸ்
இந்தப் படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் நரேன் இசையமைத்துள்ளார்.
சந்தானத்தின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

சிகரெட்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சந்தானம் சிகரெட் பிடிப்பது போல வெளியானது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் சர்ச்சை கிளம்பியது.

டீசருக்கு வரவேற்பு
இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் யோகிபாபுவை சந்தானம் கலாய்க்கும் காட்சிகள் ரசிக்கப்பட்டன. இந்நிலையில் படம் முடிந்து ரிலீஸுக்கு காத்திருந்தது. பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்து தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

31 ஆம் தேதி
இதனால் பெரிய படங்களுக்கு வழிவிட்டு காத்திருந்த சந்தானத்தின் டகால்டி படம் வரும் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











