பாசிட்டிவ் விமர்சனம்.. பெரிய போட்டி இல்லை.. வசூலில் கல்லா கட்டுகிறது சந்தானத்தின் டகால்டி!

By Staff

Recommended Video

Dagalty Action Hero Santhanam Hardwork | Santhanam | Rittika Sen | Vijay Anand

சென்னை: சந்தானம் மற்றும் யோகி பாபு மற்றும் பலர் நடித்து விஜய் ஆனந்த் இயக்கி எஸ்.பி.சௌத்திரி தயாரித்து நேற்று வெளியானது திரைப்படம் டகால்டி.

காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் சந்தனாம். லொள்ளு சபாவில் தனது நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்தவர் சந்தானம். பின் சிம்புவால் அடையாளம் காட்டப்பட்டு பின்னாளில் உச்சம் தொட்டவர்.

Santhanams Dagalty Created a positive review and collections

ஒரு காலத்தில் இவரது கால்ஷீட்காக பலரும் காத்து இருந்தனர். காமெடிகளில் நடிக்கும் பொழுதில் இருந்தே பிஸியாக இருந்தார் சந்தானம். இவரது காமெடிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்தது.

தனது டைமிங் காமெடி மற்றும் ஹீரோக்களை தாறுமாறாக கலாய்ப்பது என சந்தானம் அனைவரையும் ரசிக்க வைத்தார். காமெடியனாக இருந்து இது போதும் என்று ஹீரோவாக அடி எடுத்து வைத்தார்.

முதல் படமே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் இது தெலுங்கு படமான மரியாதை ராமன்னா படத்தின் ரீமேக். படம் சுமார் ஆகவே இருந்தது. இரண்டாவது படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதன் பின் இவருக்கு கடந்த வருடம் ஒரு பெரிய ஹிட் கொடுத்தது ஏ1 படம்.

தற்போது இந்த வருடம் வெற்றியுடன் துவங்கி உள்ளார் சந்தானம். இவர் நடிப்பில் நேற்று வெளியான டகால்டி திரைப்படம் பல இடங்களில் நல்ல வசூலை குவித்து வருகிறது. முதல் நாளே உலகளவில் பல கோடி வசூலை குவித்து உள்ளது. இரண்டாம் நாளான இன்றும் தியேட்டர்களில் காலை காட்சி முதலே 80 முதல் 90 சதவீத தியேட்டர் சீட் ஆக்குபன்ஸி உடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Santhanams Dagalty Created a positive review and collections

சந்தானம் மற்றும் யோகி பாபு செய்யும் காமெடி கவுன்ட்டர்கள், கடைசி 20 நிமிடங்களில் யோகி பாபு, பிரம்மானந்தம் அசத்தும் காமெடி போர்ஷன், லூசு ஹீரோயினாக கன கச்சிதமாக நடித்துள்ள ரித்திகா சென் என அனைவரும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

சென்னை, மதுரை, கோவை மற்றும் சேலம் போன்ற இடங்களில் படம் நல்ல வசூலை குவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X