»   »  கோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட் செல்கிறது சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு'

கோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட் செல்கிறது சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்குத் துட்டு திரைப்படம் விரைவில் இந்தியிலும் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

சந்தானம், மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் உட்பட ஏராளமான காமெடி நடிகர்கள் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான 'தில்லுக்குத் துட்டு' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


Santhanam's Dhilluku Dhuddu Remake Hindi

2 நாட்கள் முடிவில் இப்படம் 6 கோடிகள் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் இப்படத்தை ரீமேக் செய்திட அங்குள்ள தயாரிப்பாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனராம்.


இதுகுறித்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனர் முரளி '' தமிழ்நாட்டில் 300 திரையரங்குகளில் வெளியான 'தில்லுக்குத் துட்டு' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் பல்வேறு இடங்களிலும் இப்படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்திட தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.


தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கிலும் இப்படத்தை 'டப்' செய்து வெளியிடவிருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.


2016 ம் ஆண்டின் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற படங்கள் தமிழ்ப்படங்கள் வரிசையில் 'தில்லுக்குத் துட்டு' திரைப்படத்திற்கு 5 வது இடம் கிடைத்துள்ளது.

English summary
Sources said Santhanam's Dhilluku Dhuddu to be Remade in Hindi Very soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos