ஒரு சந்தானம் அலப்பறையே தாங்க முடியாது.. இதுல 3 வேற.. மாஸ் காட்டும் டிக்கிலோனா ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: சந்தானம், ஹர்பஜன் சிங், யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சந்தானம் 3 கெட்டப்களில் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

மூன்று சந்தானம்

மூன்று சந்தானம்

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது நடிகர் சந்தானம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தி பட சாயலில் மூன்று கெட்டப்புகளில் சந்தானம் போஸ்டர் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

டிரிபிள் டிரபுள்

டிரிபிள் டிரபுள்

டபுள் டிரபுள் கேள்வி பட்டிருப்பீங்க, இதோ டிரிபிள் டிரபுள்.. செம காமெடியான பிரச்சனை என காமெடி நடிகர் யோகி பாபு கேப்ஷன் கொடுத்து சந்தானத்தின் இந்த டிக்கிலோனா போஸ்டரை தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சமீபத்தில் சந்தானத்துடன் டகால்டி படத்தில் யோகி பாபுவின் காமெடி சிரிப்பலையை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட க்ளூ

ஏகப்பட்ட க்ளூ

இந்த படம் டைம் டிராவல் கதையாக இருக்கும் என்றும், ஒரு சந்தானம் மாப்பிள்ளை போலவும், இன்னொரு சந்தானம் மின்சார ஊழியராகவும், மற்றொரு சந்தானம் ஒரு தடகள வீரராகவும் காட்சியளிக்கின்றனர். போஸ்டர் பேக்ரவுண்டில் டைம் மெஷின் ஒன்று இருப்பதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுகிறது.

3 நாள் 3 போஸ்டர்கள்

3 நாள் 3 போஸ்டர்கள்

இன்று முதல் தினமும், மாலை 5 மணிக்கு மூன்று நாட்கள் மூன்று போஸ்டர்கள் என டிக்கிலோனா படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் என்று நடிகர் சந்தானம் மற்றும் படக்குழு அறிவித்திருக்கிறது. முதல் போஸ்டரிலேயே ஏகப்பட்ட க்ளூ இருக்கும் நிலையில், அடுத்தடுத்த போஸ்டர்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Recommended Video

Kaka Muttai சின்ன பசங்க இப்போ Hero மாறி இருக்காங்க | Dhanush
ஹீரோயின் யார்

ஹீரோயின் யார்

நட்பே துணை படத்தில் நடித்த அனகா மற்றும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' ஷிரின் என இரு ஹீரோயின்கள் சந்தானத்திற்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, மொட்டை ராஜேந்தர், ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், இட் இஸ் பிரசாந்த், ஷாரா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X