டிக்கிலோனா, டிக்கிலோனான்னு ஒரு படம் இருக்கே .. அதுக்கு என்ன கிடைச்சிருக்கு தெரியுமா?

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள டிக்கிலோனா படத்திற்கு தணிக்கைக்குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது.

இப்படத்தில் யோகிபாபு, ஹர்பஜன் சிங் , ஆனந்தராஜ், முனீஷ்காந்த், அனகா, ஷிரின், ஷாரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் 3 விதமான கெட்டப்பில் சந்தானம் நடித்துள்ளார்.

ஹீரோவாக

ஹீரோவாக

சின்னத்திரையில் அறிமுகமாகி, டைமிங் காமெடியில் கலக்கி,சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சந்தானம். இவர், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக சில படங்களில் நடித்து வருகிறார்.

டைம் டிராவல்

டைம் டிராவல்

சந்தானம் 3 கெட்டப்பில் நடிக்கும் டைம் டிராவல் நகைச்சுவை திரைப்படம் தான் டிக்கிலோனா. இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில் 2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தமது கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்க சந்தானம் டைம் டிராவல் செய்வதாக கூறப்படுகிறது.

பாடல்கள் வரவேற்பு

பாடல்கள் வரவேற்பு

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

யூ சான்றிதழ்

யூ சான்றிதழ்

டிக்கிலோனா படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் டிக்கிலோனா படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனேகமாக இப்படம் மே மாதம் ரிலீசாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடிப்பல் வெளியான பாரீஸ் ஜெயராஸ் படம் ஹிட்டானாது. இதையடுத்து அவரது நடிப்பில சர்வர் சுந்தரம் படம் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X