சந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா?

சென்னை: சந்தானம் கடைசியாக ஏ1 படத்தில் நடித்திருந்தார், அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயகத்தில் 'டிக்கிலோனா' என்ற படத்தில் நடித்து வருகிறார், கார்த்திக் யோகி இதற்கு முன் நினைத்தது யாரோ மற்றும் பலூன் படங்களை இயக்கியுள்ளார்.

சந்தானம் முழு நேர ஹீரோவாக மாறியதில் இருந்து கதைகளை கவனமாய் தான் தேர்வு செய்து வருகிறார், ஹீரோவாக நடித்தாலும் தனது மார்கெட்டான காமெடியை விட்டு விலகி போகாமல் அதனுள் இருந்து கொண்டு ஹீரோயிசம் செய்து வருகிறார் . சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே மிக பெரிய வெற்றி படங்கள் .

செல்வராகவனுடன்

இதை தொடர்ந்து டகால்ட்டி ,ஓடி ஓடி உழைக்கனும் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இயகத்தில் 'மன்னவன் வந்தானடி'ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . கொஞ்ச நாட்களுக்கு முன்பு கூட செல்வராகவன் மற்றும் சந்தானம் இந்தோனேசியாவில் சூட்டிங்கின் பொழுது அங்கு உள்ள ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தனர் . அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது .

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

மன்னவன் வந்தானடி படம் நீண்ட நாட்களாக எடுக்க பட்டு வருகிறது மறுமுனையில் செல்வராகவனின் மற்றொரு படமான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யபடாமல் கிடப்பில் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன் இதற்கான சரியான விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை.

காமெடி குடும்பம்

காமெடி குடும்பம்

தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'டிக்கிலோனா' படத்தின் நடிகர்கள் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது . இதில் அனாகா ,ஷிரின் ,யோகிபாபு, ஆனந்தராஜ் ,முனிஸ்காந்த், மொட்ட ராஜேந்தர், சித்ரா லக்ஷ்மணன், சிவா, சாரா, அருண் அலெக்ஸாண்டர், நிலழ்கள் ரவி ,இட்ஸ் பிரசாந்த் மற்றும் விளையாட்டு வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இந்த போஸ்டரை பாக்கும் போது ஒரு மிக பெரிய நகைச்சுவை பட்டாளமே படத்தில் நடிக்கிறது என்பது தெரிகிறது.

காமெடிக்கு கியாரன்டி

காமெடிக்கு கியாரன்டி

இந்த மாதிரியாக முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் எப்படியாவது மக்களை கவர்ந்து விடும் ,படத்தில் கதையே இல்லையென்றாலும் கூட படத்தில் உள்ள நகைச்சுவைக்காக படம் வெற்றி பெற்று விடும் .இப்படி பல நடிகர்களை வைத்து பல்வேறு காமெடி திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்க பட்டு இருக்கிறது. இந்த படமும் நகைச்சுவை படமாக மிக பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X