ராஜா ராஜாதான்.. அப்பா பாட்டை ரீமிக்ஸ் செய்த மகன்.. வெளியானது டிக்கிலோனாவின் பேரு வச்சாலும் பாடல்!
சென்னை: சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் இடம்பெற்றுள்ள பேர் வச்சாலும் ரீமிக்ஸ் பாடல் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்தப் படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷரின் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ஏற்கனவே ட்ரைலர்
மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

டைம் மெஷின் மூலம்
ட்ரைலேரே பஞ்ச் வசனங்களால் பட்டையை கிளப்பியது. இதில் டைம் மெஷினில் ஏறி தனக்கு ஏற்கனவே நடந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பேர் வச்சாலும் வைக்காம
இந்நிலையில் இப்படத்தில் 90களில் சூப்பர் ஹிட்டான இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலை யுவன்சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் இன்று மாலை வெளியானது.
ராஜா ராஜாதான்..
நடிகர் சந்தானம் இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ராஜா ராஜாதான்.. ராஜா சார் ஒரிஜினல் இசையில் உருவான, யுவனால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலுக்கு நடனமாடியதை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பாடலோட இனிமை குறையமல்
இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள், பாடலோட இனிமை குறையாமல் ரீமிக்ஸ் பண்றதுல யுவன்தான் பெஸ்ட் என கூறி வருகின்றனர். மேலும் வேற லெவலில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











