பேரு வச்சாலும்.. வைக்காம.. சந்தானத்தின் டிக்கிலோனாவில் யுவனின் ரீமிக்ஸ்.. அசத்தல் அப்டேட்!
சென்னை: சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் இடம்பெற்றுள்ள ரீமிக்ஸ் பாடல் நாளை மாலை வெளியாக உள்ளது.
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இந்தப் படத்தை காத்திக் யோகி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷரின் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ஏற்கனவே ட்ரைலர்
மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

டைம் மெஷின் மூலம்
ட்ரைலேரே பஞ்ச் வசனங்களால் பட்டையை கிளப்பியது. இதில் டைம் மெஷினில் ஏறி தனக்கு ஏற்கனவே நடந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பேர் வச்சாலும் வைக்காம
இந்நிலையில் படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதாவது 90களில் சூப்பர் ஹிட்டான இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலை டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளார் யுவன்சங்கர் ராஜா.

சோனி மியூஸிக்
இந்தப் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனை சோனி மியூஸிக் சவுத் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் வெய்ட்டிங் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











