சந்தானத்தின் டிக்கிலோனா ஓடிடியில் வெளியாகிறது... ரிலீஸ் தேதி மாஸ் அப்டேட் !
சென்னை : தொடர்ந்து காமெடி கதை களத்தில் படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நடிகர் சந்தானம்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சென்னை தமிழ்
தனது கலகலப்பான பேச்சுக்கும்,டைமிங் கவுண்ட்டர்களுக்கும் ,சென்னை தமிழில் பேசி தனக்கென ஒரு பாணியை கையாண்டு கொண்டு தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தான் சந்தானம் .விஜய் டிவி லொள்ளு சபா மூலம் பிரபலமாகி இப்போது டாப் ஹீரோ லிஸ்டில் இருக்கிறார் நம்ம சந்தானம்.காதல் அழிவதில்லை ,மன்மதன்,அலை ,சச்சின் போன்ற பல படங்களில் ஹோரோக்களின் நண்பனாக நடித்தார் .பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி ரூட்டை பிடித்து கொண்டார் சந்தானம்.அறை எண் 305இல் கடவுள் என்ற படத்தின் மூலன் லீட் ரோலில் நடிக்க தொடங்கிய சந்தானம் ,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,தில்லுக்கு துட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் .நடிகனாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார்.

தனித்துவமான கவுண்ட்டர்கள்
சந்தானம் என்றாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றாலும் சரி திரைப்படங்கள் என்றாலும் சரி தனது தனித்துவமான கவுண்ட்டர்கள் மூலம் தமிழ் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் சந்தானம் காமெடியனாக இருந்து இப்பொழுது ஹீரோவாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்தாலும் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி நடிப்பதில் கில்லாடியான சந்தானம் A1 படத்திற்கு பிறகு மீண்டும் ஜாக்சன் இயக்கத்தில் நடித்திருந்த பாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

டிக்கிலோனா
அதைத்தொடர்ந்து இப்பொழுது அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார். ஜென்டில்மேன் திரைப்படத்தில் செந்தில் கவுண்டமணி காமெடியில் வரும் ஒரு விளையாட்டின் டைட்டிலை இந்த படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான டைட்டிலுக்கு தகுந்தவாறு திரைப்படமும் மிக வித்தியாசமாக உருவாகியுள்ளது. ஆம் இதுவரை சந்தானம் ஒரு ரோலில் மட்டும் தான் நடித்து பார்த்துள்ளோம். ஆனால் முதல்முறையாக மூன்று வேடங்களில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். 2027 ஆம் ஆண்டில் இருந்து 2020 க்கு டைம் டிராவல் செய்து நடக்க இருந்த தன்னுடைய கல்யாணத்தை நிறுத்த சந்தானம் போராடுவதை போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திரைப்படத்தில் டைம் டிராவலிங் மெஷின் முக்கிய பங்கு வகிக்கிறது.

டைம் டிராவல்
இன்று நேற்று நாளை, 24 ஆகிய படங்களை தொடர்ந்து தமிழில் டைம் டிராவல் மெஷினை கொண்டு உருவாகும் மூன்றாவது திரைப்படமாக டிக்கிலோனா உருவாகியுள்ளது. மேலும் இதில் யோகிபாபு, முனிஸ்காந்த்,ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனேகா மற்றும் ஷிரின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கிள் கேப் மற்றும் பேர் வச்சாலும் என்ற இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு இணையதளத்தில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதில் பேர் வச்சாலும் பாடல் பழைய பேர் வச்சாலும் பாடலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்
கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் பல முன்னை ஹீரோக்களின் திரைப்படங்களும் OTT தளத்தில் தான் வெளியிடுகின்றனர்.இன்னும் சிலர் லாபம் பார்ப்பதற்காக பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்காமல் அந்தோலஜி படங்கள் போல் சின்ன பட்ஜெட்டில் முடித்து கொண்டு அதை ஓடிடி தளத்தில் வெளிட்டு வருகின்றனர்.அந்த மாதிரியான படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது .சில இயக்குனர்களுக்கு படத்தை ஓடிடியில் வெளியிடப்பிடிக்காத காரணத்தினால் திரையரங்குகள் திறக்கும் வரையிலும் காத்துகொண்டு இருக்கின்றனர் .ஆனால் கொரோனா பரவல் எப்போது முடியும் ,திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் சினிமா துறையே முடங்கி இருப்பதால் .பலர் ஓடிடி தளத்தை நாடுகின்றனர் .அந்த வகையில் இந்த படமும் ஓடிடியில் வெளியிடப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

அலைமோதும் ரசிகர்கள்
சாதாரணமாகவே சந்தானம் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் குடும்பம் குடும்பமாக கூட்டம் அலைமோதும் .இப்பொழுது டிக்கிலோனா படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்தது. பொதுவாகவே படத்தில் தான் சந்தானத்தின் அட்ராசிட்டி தாங்கமுடியாது ஆனால் டிக்கிலோனா படத்தின் போஸ்டர் மட்டுமே காமெடியின் உச்சமாக இருக்கின்றது.இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இன்று வரை திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வர இப்பொழுது டிக்கிலோனாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. ஜி5 நிறுவனம் டிக்கிலோனா படத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது . விரைவில் அதிகாரப்பூர்வ தேதியுடன் கூடிய அறிவிப்பு வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











