கண்ணா.. வாழ்க்கையில எதுவுமே தப்பு கிடையாது! - சந்தானத்துக்கு ரஜினி சொன்ன உபதேசம்
ரஜினியுடன் ஒரு முறை நடித்தவர்கள் அந்த அனுபவத்தை காலம் முழுக்க பத்திரிகைகளில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இந்த முறை சந்தானம். லிங்காவில் அவர்தான் பிரதான காமெடியன். ரஜினியுடன் ஒரு மாதத்துக்கு மேல் தங்கியிருந்து நடித்துள்ளார்.
ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் பற்றி சமீபத்தில் ஆனந்த விகடனில் அவர் மனம் திறந்துள்ளார்.
சந்தானத்தின் வார்த்தைகளிலிருந்து...

ஆன்மீக ரஜினி
''ஆன்மிகம் பத்தி பேசினா, நேரம் போறதே தெரியாது. மனசுக்குள்ள ரொம்ப நாளா குடாய்ஞ்சுட்டு இருக்கிற விஷயங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். 'இதுக்கு இதுதான் தீர்வு, உபாயம்'னு எந்தக் கேள்விக்கும் லாஜிக்கலா சரியான பதிலைச் சொல்வார்.

தப்பு எதுண்ணே..?
ஒரு தடவை, 'அசைவம் சாப்பிட்டா தப்பு, மது குடிச்சா தப்புனு சொல்றாங்களே... உண்மையில் தப்புன்னா என்னண்ணே?'னு கேட்டேன்.

எதுவுமே தப்பில்ல கண்ணா...
'கண்ணா... வாழ்க்கையில் எதுவுமே தப்பு கிடையாது. நீ எந்த ஒரு விஷயத்தைப் பண்ண பிறகு, 'சே... என்னடா இப்படிப் பண்ணிட்டோமே?'னு யோசிச்சு வருத்தப்படுறியோ, அப்போ அது தப்பு. அதைத் தவிர மத்த எல்லாமே கரெக்ட்'னு சொன்னார்.

எல்லாமே தப்பா நினைக்கிறே..
'நாம நினைக்கிறது எல்லாமே தப்பாவே இருக்கேண்ணே'னு கேட்டேன். 'அப்ப எல்லாமே நீ தப்பாதான் நினைக்கிற'னு சிரிச்சார். இப்படி சீரியஸ் விவாதங்களைக் கூட கலகல காமெடியாக முடிப்பார்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











