Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சந்தானத்தின் குலுகுலு ரிலீஸ் தேதி அறிவிப்பு...செம மாஸ் காட்டுறாங்களே
சென்னை : மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய டைரக்டர் ரத்ன குமார் இயக்க உள்ள படம் குலு குலு. சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த மாதம் முடிவைடந்தது.
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டைன்மென்ட் பேனரில் ராஜ் நாராயணன் தயாரித்துள்ள இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமுர்த்தி, பிரதீப் ராவத், மரியன் ஜார்ஜ், தீனா, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் கவிழ்ந்து கிடக்கும் காய்கறி லாரி முன் வாயின் கேரட்டை கடித்த படி, சந்தானம் சீட்டு விளையாடுவது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் ஜுலை மாதம் ரிலீஸ் செய்யப்படும் என சொல்லப்பட்ட நிலையில், இன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 29 ம் தேதி தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ரெட் ஜெயண்ட் முவிஸ் அறிவித்துள்ளது.
இந்த படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் தான் கைப்பற்றி உள்ளது. கையில் மிஸ் கன் போன்றதை வைத்து தீயால் சுட்டபடி சந்தானம் ஆக்ரோஷமாக நிற்கும் மாஸ் போஸ்டரும் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவலை ரெட் ஜெயண்ட் முவிஸ் வெளியிட்டுள்ளது.
குலுகுலு படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குலுகுலு படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கி உள்ளது. டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை சன் நெக்ஸ்ட் வாங்கி உள்ளது. குலுகுலு என சொல்லப்படும் குகுள் என்ற கேரக்டரில் தான் சந்தானம் நடித்துள்ளார்.
பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்ட குலுகுலு, 13 மொழிகள் தெரிந்தவர். யார் என்ன கேட்டாலும், எதை பற்றி கேட்டாலும் தெளிவான விளக்கம் அளிக்கும் கேரக்டர் என்பதால் சந்தானத்திற்கு இந்த படத்தில் குகுள் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். அவரது வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியது தான் குலுகுலு படத்தில் கதை என சொல்லப்படுகிறது.
Recommended Video
சிவாஜியாக மாறிய மம்முட்டி..'நண்பகல் நேரத்து மயக்கம்' டீசர் ஸ்பெஷல் !