பிரபல இயக்குநர் வெளியிட்ட சந்தானம் படத்தின் பர்ஸ்ட் லுக்... சூப்பர் லுக்கில் சந்தானம்!
சென்னை : நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் அவரது நடிப்பில் சபாபதி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தற்போது அவரது நடிப்பில் உருவாகிவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம் காமெடி ட்ராக்கிலிருந்து விலகி ஹீரோவாக நடித்து வருகிறார். காமெடி கலந்த ஹீரோயிசத்தை தனது பாணியாக கொண்டு சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். சில படங்களை தானே தயாரித்தும் மற்றவர்கள் தயாரிப்பிலும் நடித்து வருகிறார்.

டிக்கிலோனா படம்
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் தனது உடலை குறைத்து காட்டியிருந்தார் சந்தானம். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன.

சபாபதி படம்
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக சபாபதி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தில் திக்குவாயால் பாதிக்கப்பட்ட இளைஞராக இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை -மகன் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்
இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு ஏஜெண்ட் கண்ணாயிரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசை
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை மனோஜ் பீடா இயக்கியுள்ளார். இந்தப் போஸ்டரில் வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார் சந்தானம். படத்தின் சூட்டிங் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தெலுங்கு பட ரீமேக்
தெலுங்கில் வெளியான ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற பெயரில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்காக தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் உருவாகியுள்ளது. படத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, விஜய் டிவி புகழ், முனீஸ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பில் சந்தானம் படம்
தெலுங்கில் சூப்பர்ஹிட்டான இந்தப் படத்தில் தற்போது சந்தானம் இணைந்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்கிலோனா படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், இந்தப் படம் சந்தானத்திற்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











