A1 இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம்.. பாரிஸ் ஜெயராஜ் ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ்!

சென்னை : கலக்கலான காமெடி திரைப்படங்களில் அடுத்தடுத்து செம பிஸியாக நடித்து வரும் நடிகர் சந்தானம் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பிஸ்கோத்து திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு அனைவரும் ரசிக்கும் காமெடி திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சந்தானம் A1 திரைப்பட இயக்குனருடன் இப்பொழுது மீண்டும் இணைந்துள்ளார்.

ஹீரோ அவதாரம்

ஹீரோ அவதாரம்

தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி பின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இப்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்து வெற்றி நடை போட்டு வருகிறார்.

அனைத்து வயதினரும்

அனைத்து வயதினரும்

தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு தனக்கே உரித்தான நக்கல் பேச்சுடன் ஹீரோயிசம் கலந்த காமெடியை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் கொடுத்து வரும் சந்தானத்திற்கு 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிகர்களாக உள்ள நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களின் நடித்து வருவதோடு தயாரித்தும் வருகிறார்.

சந்தானம் ஜான்சன் கூட்டணி

சந்தானம் ஜான்சன் கூட்டணி

இந்த நிலையில் சென்ற ஆண்டு வெளியான A1 திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வெற்றிபெற்ற நிலையில் அப்படத்தை இயக்குனர் ஜான்சன். கே இயக்கியிருந்தார். ஏற்கனவே வெற்றியை கண்ட சந்தானம் ஜான்சன் கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கையில் மைக் உடன் கெத்தாக

கையில் மைக் உடன் கெத்தாக

டகால்டி திரைப்படத்தை தொடர்ந்து பிஸ்கோத்து இப்பொழுது ஓடிடியில் வெளியான நிலையில் டிக்கிலோனா திரைப்படத்தில் நடித்து வரும் சந்தானம் A1 திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜான்சனுடன் மீண்டும் "பாரிஸ் ஜெயராஜ்" என்ற திரைப்படத்தில் இணைந்திருக்க இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தானம் கையில் மைக் உடன் கெத்தாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றவாறு வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் நிலையில், A1 திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்த திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார் மேலும் சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளினி சஷ்டிகா ராஜேந்திரன் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X