வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... புரமோஷனுக்காக தமிழகத்தை ரவுண்டடிக்கும் சந்தானம்!
சென்னையில் என்னதான் முயன்றாலும் பார்க்கவே முடியாத சந்தானத்தை, புதுச்சேரிப் பக்கம் போனால் இன்றைக்கு சுலபத்தில் சந்தித்துவிடலாம்.
காரணம், தான் ஹீரோவாய் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை ஓட வைப்பதற்காக இப்போது ஊர் ஊராய்ப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம் கடந்த 9-ந் தேதி திரைக்கு வந்தது. பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படம், ஓஹோ என்று ஓடும் என எதிர்ப்பார்த்தார் சந்தானம்.

புரமோஷனல் வேலை
ஆனால் ரிசல்ட் கொஞ்சம் அப்படி இப்படி ஆகிவிட்டது. வேறு வழியில்லை என்பதால், தியேட்டர் தியேட்டராகப் போய் ரசிகர்களைப் பார்த்து படத்தை புரமோட் செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

வேலூர்
அவர் முதல் விசிட் பண்ணது வேலூருக்குதான். அங்கு அப்சரா, லட்சுமி ஆகிய இரு அரங்குகளில் போய் ரசிகர்களைச் சந்தித்தார் சந்தானம். அதுவரை டல்லடித்து வந்த அரங்கங்கள், சந்தானம் வருவது தெரிந்ததும் அந்தக் காட்சியில் மட்டும் நிரம்பி வழிந்தன.

நன்றி
அவர்களிடம் பேசிய சந்தானம், "நீங்கள் ஆர்வமாக இந்த படத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் உங்களை இடையூறு செய்ய விரும்பவில்லை. படம் பார்க்க வந்ததற்கு நன்றி," என்று கூறிவிட்டு அடுத்த தியேட்டர் பார்க்கக் கிளம்பினார்.

புதுவை
தொடர்ந்து திருவண்ணாமலை சக்தி, பாலசுப்பிரமணியம் தியேட்டர்களில் விசிட் செய்த சந்தானம், அடுத்து புதுச்சேரி கிளம்பினார். இன்று அவர் புதுவையில் உள்ள ராஜா, முருகா, ஜீவா அரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கிறார்.

திருச்சி - மதுரை - கோவை
இன்றே திருச்சிக்கும் செல்லும் சந்தானம், நாளை மதுரைக்கும், நாளை மறுநாள் கோவைக்கும் போய் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.


Click it and Unblock the Notifications











