காமெடி கலாட்டா... 2 மில்லியன் பார்வைகளை கடந்த சபாபதி டிரைலர்

சென்னை : சந்தானம், விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நடித்துள்ள படம் சபாபதி. முழுக்க முழுக்க காமெடி, பொழுதுபோக்கு படமான இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கி உள்ளார்.

ப்ரீத்தி வர்மா ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஆர்கே என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. 2020 ம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி இந்த படத்தின் ஷுட்டிங் கும்பகோணத்தில் துவங்கப்பட்டது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

இந்த ஆண்டின் ஜனவரி 21 ம் தேதி சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சபாபதி படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. ஏப்ரல் மாதமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா போன்ற காரணங்களால் தள்ளிப் போன இந்த படம், ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக வதந்திகள் பரவின.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

இந்த படத்தின் லிரிக்கல் பாடல் வீடியோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றன. சபாபதி படம் வரும் நவம்பர் 19 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை மோஷன் போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

விதியின் விளையாட்டு

விதியின் விளையாட்டு

இதில் திக்கு வாய் குறைபாடுடைய ஹீரோ சந்தானம் வேலை தேடி செல்லும் இடங்களில் எல்லாம் நிராகரிக்கப்படுகிறார். அவருக்கு விதியின் விளையாட்டால் பெரிய சூட்கேஸ் நிறைய பணம் கிடைக்கிறது. ஆனால் அந்த பெட்டியை தேடி வில்லன் கும்பல் அலைகிறது.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

ஹீரோவின் வாழ்க்கையில் நடைபெறும் கஷ்டங்கள், கலாட்டாக்கள் ஆகியவற்றை காமெடியுடன் ஜாலியாக சொல்லி உள்ளது டிரைலரில் தெளிவாக தெரிகிறது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

2 மில்லியன் பார்வைகளை கடந்தது

2 மில்லியன் பார்வைகளை கடந்தது

இந்த டிரைலர் யூட்யூப்பில் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே 2.1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி உள்ளது. டாப் ஹீரோக்களின் படங்களின் டிரைலர், டீசர் போன்றவற்றிற்கு கிடைக்கும் அதே வரவேற்பு முழு நீள காமெடி படத்தின் டிரைலருக்கும் கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ரஜினி, கமலை மிஞ்சிவிடுவாரோ

ரஜினி, கமலை மிஞ்சிவிடுவாரோ

சந்தானம் படத்தின் இந்த டிரைலரின் சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்குள் டிரைலரே சாதனை படைத்திருக்கிறது என்றால் இன்னும் வரும் நாட்களில் ரஜினி, கமல் படங்களின் சாதனையை இந்த படம் முறியத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்.

அருண் விஜய்யுடன் மோதும் சந்தானம்

அருண் விஜய்யுடன் மோதும் சந்தானம்

தந்தை - மகன் புரிதலை மையமாகக் கொண்ட சபாபதி படம், அருண்விஜய் நடித்துள்ள பார்டர் படத்துடன் மோத உள்ளது. இதற்கு முன் சந்தானம் நடித்த டிக்கிலோனா படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானம் நடித்த படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளதாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X