தியேட்டரில் ரிலீஸ் ஆகும் சந்தானத்தின் சபாபதி... என்னைக்குன்னு பாருங்க!

சென்னை: சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். கடைசியாக டிக்கிலோனா படம் அவரது நடிப்பில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

100 சதவீத பார்வையாளர்கள்

100 சதவீத பார்வையாளர்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திரையரங்குகள் சரியாக திறக்கப்படாமல் இருந்ததால் பல படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதோடு 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி

நவம்பர் 19ஆம் தேதி

இதனால் ஒன்றன் பின் ஒன்றாக திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சந்தானத்தின் 'சபாபதி' திரைப்படம் தற்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் நவம்பர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சந்தானத்தின் பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

பெண்ணே பெண்ணே பாடல்

பெண்ணே பெண்ணே பாடல்

இதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இப்படம் கமர்ஷியல் என்டர்டெய்னர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்ரீநவாச ராவ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் 'பெண்ணே பெண்ணே' பாடலை படக்குழு வெளியிட்டது.

ஏஜென்ட் கண்ணாயிரம் படம்

ஏஜென்ட் கண்ணாயிரம் படம்

சந்தானம் ஹீரோவாக நடித்த டிக்கிலோனா மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டன. தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்தப் படம் 2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

டைட்டில் லுக்

டைட்டில் லுக்

இந்தப் படத்தில் சந்தானம், ஊர்வசி, புகழ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடந்த மாதம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X