சந்தானத்தின் சபாபதி படம்... நவம்பர் 19ம் தேதி ரிலீஸ்

சென்னை : நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சபாபதி.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் சபாபதி படத்தின் மோஷன் போஸ்டரும் சிறப்பான வகையில் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் காமெடியனாக அறிமுகமாகி, முன்னணி காமெடியனாக ஹீரோக்களுக்கு போட்டியாக நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றார். இவரது கவுண்டர் காமெடிக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் காணப்பட்ட நிலையில், முன்னணி ஹீரோக்களும் இவரது கால்ஷீட்டிற்காக காத்திருந்த நிலை ஏற்பட்டது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இதனிடையே, காமெடி ட்ராக்கிலிருந்து தன்னை ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார் சந்தானம். இவரது நடிப்பில் இனிமே இப்படித்தான் என்பது உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவித்தது. தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம்.

டிக்கிலோனா படம்

டிக்கிலோனா படம்

இவரது நடிப்பில் சமீபத்தில் பாரீஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் ரிலீசாகி கொரோனா சமயத்திலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. டிக்கிலோனாவில் டைம் டிராவல் கான்செப்ட் மையமாக கொள்ளப்பட்டது. இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

சபாபதி படம்

சபாபதி படம்

இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் சபாபதி. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயராக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டருடன் இணைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 19ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோஷன் போஸ்டரில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூறப்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டு பையன் லுக்

பக்கத்து வீட்டு பையன் லுக்

இந்தப் படத்தில் சந்தானம் மிகவும் ஸ்மார்ட்டாக பக்கத்து வீட்டு பையன் லுக்கில் காணப்படுகிறார். படத்தில் எம்எஸ் பாஸ்கர் சந்தானத்தின் தந்தையாக நடித்துள்ளார். இவர்களுக்கிடையிலான உறவு படத்தில் சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசை

சாம் சிஎஸ் இசை

சாம் சிஎஸ் இசையில் முன்னதாக படத்தின் பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. பாடலில் சந்தானம் மற்றும் நாயகி ப்ரீத்தி வாமா சிறப்பாக நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து டீசர் மற்றும் ட்ரெயிலரை எதிர்பார்க்கலாம்.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

முந்தைய படம் டிக்கிலோனாவிற்கு கலவையான விமர்சனங்கள் இருந்த போதிலும் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் சந்தானம். சபாபதி படத்தில் திக்குவாய் பாதித்த இளைஞராக சந்தானம் நடித்துள்ள நிலையில் அவருக்கு இந்தப் படம் சிறப்பான வெற்றியை அளிக்கும் என நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X