சந்தானத்தோட சபாபதி படம்... ரிலீஸ் தேதி இன்று அறிவிப்பு

சென்னை : நடிகர் சந்தானத்தின் நடிப்பில் அடுத்ததாக சபாபதி படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இவரது நடிப்பில் டிக்கிலோனா சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சபாபதி படத்தின் ரிலீஸ் குறித்து இன்றைய தினம் படக்குழு அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கலக்கல் காமெடி

கலக்கல் காமெடி

காமெடியில் கலக்கிவந்த நடிகர் சந்தானம், ஹீரோக்களுக்கு இணையாக நடித்துவந்தார். இதையடுத்து தன்னுடைய பாதையை தற்போது மாற்றிக் கொண்டு ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன.

டிக்கிலோனா படம்

டிக்கிலோனா படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டைம் டிராவல் படமான டிக்கிலோனா கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். முக்கியமாக படத்தில் இடம்பெற்றிருந்த ரீமிக்ஸ் பாடலான பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

சபாபதி படம்

சபாபதி படம்

இந்நிலையில் அடுத்ததாக சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆயினும் அந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் குறித்த அறிவிப்பை செய்யவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சாம் சிஎஸ் இசை

சாம் சிஎஸ் இசை

சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரீத்தி வர்மா சந்தானத்திற்கு ஜோடியாகியுள்ளார், ஸ்ரீனிவாசராவ் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் எம்எஸ் பாஸ்கர் சந்தானத்தின் அப்பாவாக நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கிடையிலான உறவை சொல்லும் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

எதிர்பார்ப்பில் படம்

எதிர்பார்ப்பில் படம்

படத்தில் திக்குவாயால் பாதிக்கப்பட்ட இளைஞராக சந்தானம் நடித்துள்ளார். அதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. தொடர்ந்த பேச்சால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருபவர் சந்தானம். அவர் திக்குவாயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ரிலீஸ் குறித்து அறிவிப்பு

ரிலீஸ் குறித்து அறிவிப்பு

ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மோஷன் போஸ்டர் இன்றைய தினம் வெளியாக உள்ளது. மேலும் நீண்ட நாட்களா இழுபறியில் இருந்த படத்தின் ரிலீஸ் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது சந்தானம் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்திதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X