’ஆடி’ செண்டிமெண்ட் பார்க்கும் சந்தானம்

சென்னை: பொதுவாக திரைத்துறையில் உள்ளவர்கள் ஆடி மாத செண்டிமெண்ட் பார்ப்பார்கள். எனவே, இந்த மாதத்தில் புதுப்பட பூஜைகள் மற்றும் ரிலீஸ்கள் பெரும்பாலும் இருக்காது.

நடிகர், நடிகைகளும் இந்த ஆடி செண்டிமெண்ட் பார்க்கும் விஷயத்தில் விலக்கல்ல. தற்போது, காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானமும் இந்த செண்டிமெண்ட் கலாச்சாரத்தில் சிக்கி விட்டாராம்.

எனவே, தான் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள படத்தின் பூஜையையும் ஆடிக்கு முன்னதாகவே முடித்து விட்டாராம் சந்தானம்.

ஹீரோ சந்தானம்...

ஹீரோ சந்தானம்...

சந்தானமும் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் படம் ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இயக்கம் ராஜமௌலி.

மரியாதை ராமண்ணா...

மரியாதை ராமண்ணா...

மரியாதை ராமண்ணா என்ற பெயரில் தெலுங்கில் சக்கை போடு போட்ட படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

காமெடி நடிகர் இயக்கம்...

காமெடி நடிகர் இயக்கம்...

இப்படத்தை, 'உன்னாலே உன்னாலே', 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குனர் ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 'முத்திரை' இவரது முதல் படைப்பு.

மரியாதை ராமண்ணா...

மரியாதை ராமண்ணா...

ராஜமௌலி இயக்கத்தில், மரியாதை ராமண்ணா என்ற பெயரில் தெலுங்கில் சக்கை போடு போட்ட படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

சிம்பிளாக படபூஜை...

சிம்பிளாக படபூஜை...

ஆடி பிறப்பதற்கு முன்தினமே, தனது ஆபிஸில் வைத்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் பூஜையை சிம்பிளாக முடித்து விட்டாராம் சந்தானம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X