குக் வித் கோமாளி பிரபலத்திற்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 சமீபத்தில் துவங்கப்பட்டது. இதில் கோமாளியாக வரும் புகழ், பலரையும் கவர்ந்தவர்.
தனது சிறப்பான பெர்ஃபாமன்சால் 2 வது சீசனிலும் தொடர்ந்து வருகிறார். இதன் பலனாக இவருக்கு சில பட வாய்ப்புக்களும் கிடைத்துள்ளன. இதனால் புகழ், தற்போது சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு நடிகராக சென்றுள்ளார்.

இவர் விஜயின் தளபதி 65, அஜித்தின் வலிமை ஆகிய படங்களிலும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆரம்ப காலத்தில் டிரைவராகவும், கார் வாஷிங் செய்வதிலும் தனது வாழ்க்கையை துவக்கிய புகழ், சமீபத்தில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கினார். தனது பரம்பரையில் அனைவரும் டிரைவர் தான். முதலில் சொந்தமாக கார் வாங்கியது நான் தான் எனவும் புகழ் உருக்கமாக கூறி இருந்தார்.
Thank you Anna @iamsanthanam pic.twitter.com/jy59GLZzpk
— Pugazh (@pugazh_iam) March 6, 2021
இந்த போட்டோக்களை அவரது ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது கடின உழைப்பையும் ரசிகர்கள் பாராட்டி, வாழ்த்து கூறி வருகின்றனர். புகழ் தற்போது சந்தானத்துடன் இணைந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் புதிதாக வாங்கிய காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த புகழிடம், கார் நன்றாக இருப்பதாக கூறி சிறிது தூரம் ஓட்டிப் பார்த்துள்ளார். பிறகு திரும்பி வந்த சந்தானம், தனது கேரவனுக்கு புகழை அழைத்து, காரில் வைக்கும் வெள்ளியில் விநாயகர் சிலை ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.
அத்துடன், நீ ஆடி, பிஎம்டபிள்யூ என எந்த கார் வேண்டுமானாலும் வாங்கு. இதே போன்று நான் உன்னை அழைத்து பரிசு கொடுப்பேன் என கூறி உள்ளார் சந்தானம். சந்தானம் தனக்கு வெள்ளியில் பரிசு கொடுத்ததை புகழ் பெருமையுடன் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











