பிறந்த நாள் அதுவுமா.. தான்யா ஹோப் உடன் டிரெஸ் இல்லாமல்.. இருக்காரே சந்தானம்..என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை : நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கிக் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சந்தானம், இன்று வெள்ளித்திரையை அலங்கரித்து வருகிறார்.
மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் நடிகர் சந்தானம் காமெடி நடிகர் என்ற அடையாளத்தை மறந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

கிக் டிரைலர்
நடிகர் சந்தானம் இன்று தனது 43வது பிறந்த நாளை முன்னிட்டு கிக் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரில் சந்தானத்தின் குரலில், காலில் ஈரம் படாமல் கடலைக்கூட தாண்டிவிடலாம், ஆனால் கண்ணில் ஈரம் படாமல் காதலை தாண்டமுடியாது என்று காதல் ரசம் சொட்ட டிரைலர் தொடங்குகிறது. அதன்பிறகு, சந்தானத்திற்கே உரிய அதே நையாண்டி உடன் பல காமெடி காட்சிகள் இந்த டிரைலரில் உள்ளன.

பிறந்த நாள் அதுவுமா இப்படியா?
டிரைலரின் முடிவில் தான்யா ஹோப் உடன் டிரெஸ் இல்லாமல் இருக்கிறார் சந்தானம். இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் பிறந்த நாள் அதுவுமா இந்த டிரைலர் செம ராவா இருக்கே என்றும்,கிக் திரைப்படம் உண்மையில் கிக்காகத்தான் இருக்கும் போல என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.சற்று முன் வெளியான இந்த டிரைலர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.

முன்னணி நடிகர்கள்
இந்த படத்தில் கோவை சரளா,செந்தில், ஷகிலா, தம்பி ராமைய்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, மனசூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் தான்யா ஹோப்பின் அம்மாவாக பஃயர் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து அலப்பறை கொடுத்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி வெற்றி அடைந்த Zoom என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் கிக். இரு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்யும் நாயகன், நாயகி ஆகியோருக்கு இடையே நடைபெறும் போட்டியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.
விறுவிறுப்பான படப்பிடிப்பு
கன்னடத்தில் வெளியான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த்ராஜ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். கிக் படத்தை இயக்கியதன் மூலம் அவர் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











