யு சான்று பெற்றது சந்தானத்தின் வாலிப ராஜா

By Shankar

பாக்யராஜின் இன்று போய் நாளை வா கதையை அப்படியே சுட்டு சந்தானம் அன்ட் கோ 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை எடுத்து நல்ல லாபமும் பார்த்தது.

இப்போது அதே டீம் இணைந்து எடுத்திருக்கும் படம் வாலிப ராஜா. சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

மனநல மருத்துவர்

மனநல மருத்துவர்

சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகிறார்.

நுஸ்ரத்

நுஸ்ரத்

இப்படத்தில் இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

சாய் கோகுல் ராம்நாத்

சாய் கோகுல் ராம்நாத்

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர்.

இப்படத்தை வாங்ஸ் விஷன் ஒன் என்ற படநிறுவனம் தயாரிக்கிறது. லோகநாதன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரதன் இசையமைத்திருக்கிறார்.

யு சான்றிதழ்

யு சான்றிதழ்

முழுநீள காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X