250 அரங்குகளில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
இன்று சந்தானத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் 250 அரங்குகளில் வெளியாகிறது.
பிவிபி சினிமாசுடன் இணைந்து சந்தானம் தயாரித்து, நடித்துள்ள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சந்தானத்தின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் தெலுங்கில் வந்த ராஜமவுலியின் மரியாதை ராமண்ணா படத்தின் ரீ்மேக்காகும்.
இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியாவதாக இருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ரஜினியின் கோச்சடையான் தள்ளிப் போனதால், இன்று அட்வான்சாக வெளியாகிறது.
சரியான நேரத்தில் தன் படம் வெளியாவதாகவும், இதில் 10-க்குப் 10 மார்க் எடுத்து தேர்ச்சி பெறுவேன் என்றும் சந்தானம் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
சந்தானத்தின் இந்தப் படத்துக்கு தமிழகமெங்கும் 250 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பத்துக்குப் பத்து எடுத்து தேறுவாரா சந்தானம்... பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications












