சந்தானம் பட ட்ரைலரை 1 மில்லியன் பேர் பாத்துட்டாங்களாம்!
சென்னை: சந்தானம் ஹீரோவாக நடிக்கும் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் பட ட்ரைலரை 10 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துவிட்டதை பெருமையுடன் விளம்பரப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சந்தானம் - அஷ்னா சவேரி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்கியுள்ளார்.
சக்தி ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் டிரைலரை இது வரையில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடித்துள்ள படத்தின் ட்ரைலரை இத்தனை பேர் பார்த்திருப்பது தமிழ் சினிமாவில் புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்காக சந்தானம் உடல் எடையை குறைத்ததோடு, நடனம் மற்றும் சண்டை பயிற்சிகளையும் முறையாக பயின்றார். தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க இந்த தோற்றத்தை மெயின்டெய்ன் பண்ணவும் முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications












