சபாபதி படத்தின் ஒளிபரப்பை அறிவிக்காத நடிகர் சந்தானம் ... கலர்ஸ் டிவியில் வேற லெவல் பிரமோ!

சென்னை : நடிகர் சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் சபாபதி.

இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு சபாபதி படம் குறித்து கலர்ஸ் டிவி புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது.

சபாபதி படம்

சபாபதி படம்

நடிகர் சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் சபாபதி. இந்த படம் கடந்த மாதத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. படத்தில் சந்தானம் தன்னுடைய கவுண்டர் காமெடியை தள்ளி வைத்துவிட்டு தன்னுடைய நடிப்பில் மெருகை ஏற்றியிருந்தார்.

திக்குவாய் இளைஞர்

திக்குவாய் இளைஞர்

அடக்கமான ஆனால் திக்குவாயால் பாதிக்கப்பட்ட இளைஞராக நடித்திருந்தார் சந்தானம். தன்னுடைய வேலை தேடும் படலம், அப்பாவுடன் அக்கப்போர், காதல், அம்மா தங்கை சென்டிமென்ட் என கலவையான நடிப்பை சந்தானம் கொடுத்திருந்தார்.

விளையாடும் விதி

விளையாடும் விதி

இத்தகைய நார்மலான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் இளைஞனின் வாழ்க்கையில் விதி விளையாடினால் என்னவாகும் என்பதை மையமாகக் கொண்டு இந்தப் படம் வெளியாகி இருந்தது. படத்தில் எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.

ஸ்ரீனிவாச ராவ் இயக்கம்

ஸ்ரீனிவாச ராவ் இயக்கம்

சாயாஜி ஷிண்டே வம்சி ஆகியோர் படத்தின் வில்லன்களாக மிரட்டலான நடிப்பை தந்திருந்தனர். ஆயினும் படத்திற்கு அவர்களின் வில்லத்தனம் போதுமானதாக இல்லை. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இந்த படத்தில் விதி என்ற விஷயத்தை கையில் எடுத்து அதற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்திருந்தார்.

வித்தியாசமான நடிப்பு

வித்தியாசமான நடிப்பு

முதல் பாதியில் அடக்கி வாசித்து இருந்த சந்தானத்தை இரண்டாவது பாதியில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் சீனிவாசராவ். ஒரு சில காமெடி காட்சிகள் எல்லையை மீறினாலும் கவுண்டரே கொடுக்காத சந்தானத்தின் நடிப்பை பார்ப்பது வித்தியாசமாக இருந்தது.

ஓவர் அப்பாவித்தனம்

ஓவர் அப்பாவித்தனம்

திக்குவாய் பிரச்சனை உள்ள இளைஞராக சந்தானம் இந்த படத்தில் நடித்திருந்தார் ஆயினும் ஓவராக அப்பாவித்தனத்தை காட்டி இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக இருந்தது. அவரை சிறப்பான வகையில் தெளிவான மனிதராக காட்டி இருந்தால் படம் இன்னும் மெருகேறி இருக்கும். இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் சாம் சி எஸ். அவரது இசையில் பாடல்கள் ஒன்றும் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் பின்னணியில் சிறப்பாக புகுந்து விளையாடி இருந்தார் சம் சி எஸ்.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பு

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பு

இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது கலர்ஸ் டிவி இந்த படத்தை ஜனவரி 9ஆம் தேதி ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சிறப்பான பிரமோ

சிறப்பான பிரமோ

கலர்ஸ் டிவியில் தனது படத்தின் ஒளிபரப்பு குறித்த அறிவிப்பை சந்தானமே அறிவிப்பார் என்று துவங்குகிறது அந்த ப்ரமோ. தொடர்ந்து சந்தானம் அந்த அறிவிப்பை வெளியிட தனது திக்கு வாயால் முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியாத நிலையில் தானே அதன் அந்த அறிவிப்பை அறிவிக்கிறது கலர்ஸ் டிவி.

இரண்டு முறை ஒளிபரப்பு

இரண்டு முறை ஒளிபரப்பு

வரும் ஜனவரி 9ஆம் தேதி கலர்ஸ் தொலைக்காட்சியில் இரண்டு மணி மற்றும் 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X