நானும் ஆர்யாவும் நிறைய கடன் வாங்கியிருக்கோம்.. வடக்குப்பட்டி ராமசாமி விழாவில் சந்தானம் ஓபன் டாக்!

சென்னை: ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இன்று சந்தானம் நடிப்பில் வரும் பிப்ரவரி 4ம் தேதி வெளியாகவுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. அதில், நடிகர் சந்தானத்துடன் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு பேசிய காட்சிகளும் ஆர்யா குறித்து சந்தானம் பேசிய விஷயங்களும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

எந்தவொரு ஃபைனான்ஸியரை போய் சந்தித்தாலும் நான் போகும் போது ஆர்யாவை பற்றி கேட்பார்கள், ஆர்யா செல்லும் போது என்னை பற்றி கேட்பார்கள். அதற்கு காரணம் நீங்க ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ் ஃபிரெண்டா என சிலர் கேட்பார்கள். ஆனால், அதுதான் இல்லை நாங்க ரெண்டு பேரும் அவ்ளோ கடன் வாங்கியிருக்கோம் என பாஸ் என்கிற பாஸ்கரன் நல்ல தம்பியாவே மாறிவிட்டார் சந்தானம்.

Santhanam says Arya and me bought many debts at Vadakkupatti Ramasamy Audio launch

கழட்டிவிட்ட ரெட் ஜெயன்ட்: வடக்குப்பட்டி ராமசாமி இசை வெளியீட்டு விழாவில் இந்நேரம் ஆர்யாவுக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் நின்று கொண்டு பேசியிருப்பார் என்றும் "ராமசாமி" பற்றிய வசனம் கிளப்பிய சர்ச்சை காரணமாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. இந்நிலையில், சிறப்பு விருந்தினராக ஆர்யாவை அழைத்து வந்திருந்தார் சந்தானம்.

ஆர்யா கொடுத்த புத்தாண்டு பார்ட்டி: எப்பவுமே ஆர்யா என்னை பார்த்தால் என் உடம்பை தான் முதலில் பார்ப்பான். என் இங்கே சதை போட்டுட்டன்னு திட்டுவான். ஒருமுறை புத்தாண்டு பார்ட்டிக்கு செல்லலாம் என யோசித்து ஆர்யாவுக்கு தெரியாத்தனமா போன் பண்ணிட்டேன். அண்ணா நகர் வந்துடுன்னு சொன்ன ஆர்யா புத்தாண்டு இரவில் 4 மணி நேரம் ஃபுட்பால் விளையாட வைத்தான். அதன் பின்னர் 2 மணி நேரம் நீச்சல் அடித்தோம். காலையில் ஜிம்முக்கு கூட்டிட்டுப் போயிட்டான். நியூ இயருக்கு புதுசா ஜிம்முக்குப் போவோம்னு ரெசல்யூஷன் எடுப்போம். ஆனால், ஆர்யா நியூ இயர் அன்னைக்கே ஜிம்ல தான் இருப்பான். அந்தளவுக்கு ஃபிட்னஸ் ஃப்ரீக் என நண்பனை பாராட்டி பேசினார் சந்தானம்.

ரெண்டு பேரும் கடன் வாங்கியிருக்கோம்: எந்தவொரு ஃபைனான்ஸியரை பார்க்கப் போனாலும் ஆர்யா எப்படி இருக்கிறார் என என்னிடம் கேட்பார்கள். ஆர்யா போனால் சந்தானம் எப்படி இருக்கிறார் என கேட்பார்கள். நலம் விசாரிக்க அல்ல, நாங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு கடன் வாங்கியிருக்கோம். ஏதாவது படம் நடிக்கிறோமோ, படம் ஓடுதா? பணம் வருமான்னு தான் விசாரிப்பாங்கன்னு சொன்ன சந்தானம் தங்க முட்டை போடுற வாத்து ஒன்னு கிடைச்சிருக்குன்னு ஆர்யா ஒருமுறை சொல்லி விட்டு ஒருத்தரிடம் அழைத்துச் சென்றான். வாத்து முட்டை போடுதான்னு பின்னாடியே கை வச்சு பார்த்தா எங்களுக்குத் தான் பின்னாடி ரத்தம் வருது. அந்த வாத்து யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என சந்தானம் பேசியதும் உதயநிதியை தான் சொல்றாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சேர்ந்து நடிக்கப் போறோம்: சீக்கிரமே கார்த்திக் யோகி இயக்கத்தில் நானும் ஆர்யாவும் சேர்ந்து நடிக்கப் போறோம். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை விட சரியான கலாய் படமாக அது இருக்கும் என்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் சந்தானம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X