கடன் வாங்கக்கூடாதுன்னு.. கடன் வாங்கி எடுத்த படம்.. 'இங்க நான் தான் கிங்கு’ ஓபனாக பேசிய சந்தானம்!
சென்னை: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தின் பிரஸ் ஷோவில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தானம் நடித்து வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ’மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோயை வைத்துக்கொண்டு மூடநம்பிக்கையால் மக்கள் எப்படி மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதை கார்த்திக் யோகி எடுத்து காட்டியிருந்தார். ஆனால், கிளைமேக்ஸில் ஆன்மிக டச்சுடன் முடித்த நிலையில், அந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெறவில்லை.

கடந்த வாரம் வெளியாகவிருந்த ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் கவினின் ஸ்டார் திரைப்படம் வெளியான நிலையில், இந்த வாரம் தள்ளிப்போனதாக தகவல்கள் வெளியாகின.
காமெடியன் டு ஹீரோ: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை கலாய்த்து ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க வந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் அவரது கால்ஷீட்டுக்காக பல பிரபலங்கள் காத்திருந்த சூழல் ஏற்பட்டது. நாமே இனி ஹீரோவாக நடிக்கலாம் என முடிவெடுத்த சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.
இங்க நான் தான் கிங்கு: அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமைய்யா, விவேக் பிரசன்னா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காமெடி படமான இங்க நான் தான் கிங்கு இன்று வெளியானது. அந்த படத்தின் பிரஸ் ஷோவில் கலந்து கொண்டு சந்தானம் பேசியது தற்போது தீயாக பரவி வருகிறது.
கடன் வாங்கி எடுத்த படம்: தமிழ் சினிமாவில் மட்டுமின்றி உலகளவில் பல படங்களும் கடன் வாங்கித்தான் எடுக்கப்படுகிறது. கடன் வாங்கக் கூடாது என சொல்லும் படத்தையே கடன் வாங்கித்தான் எடுத்துள்ளோம் என சந்தானம் பேசியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உங்க வேலைக்கு வரப்போறேன்: படங்களில் நடிக்கவில்லை என்றால் நானும் உங்க வேலைக்கு வந்துவிடலாம் என நினைக்கிறேன். உங்க லைஃப் தான் ரொம்பவே சூப்பரா இருக்கு என சந்தானம் பத்திரிகையாளர்களை பார்த்து பேசியுள்ளார். இங்க நான் தான் கிங்கு திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றும் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்றும் சந்தானம் பேசியுள்ளார்.
அரண்மனை அளவுக்கு: அரண்மனை 4 திரைப்படத்தில் காமெடி மற்றும் ஹாரர் கலந்து இருந்த நிலையில், அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி 75 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருக்கிறது. ஸ்டார் படத்தில் காமெடி காட்சிகள் அதிகம் இல்லாதது தான் அந்த படத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றனர். சந்தானம் படம் ரசிகர்களை சிரிக்க வைத்து ஹிட் அடிக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











