விஜய் பார்த்துட்டு பாராட்டினாரு.. கில்லிக்கு போட்டியா ஜல்லி ரீ ரிலீஸ் பண்ணனும்.. சந்தானம் பேட்டி!

சென்னை: சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படம் இந்த வாரம் மே 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த வாரம் மே 10 ஆம் தேதி கவின் நடித்து வெளியான 'ஸ்டார்' படத்துடன் போட்டியாக இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் போட்டியை தவிர்க்கும் விதமாக சந்தானம் இந்த வாரம் தனது படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரயாலயா நடித்துள்ளார். மேலும், தம்பி ராமையா, பால சரவணன், முனீஸ்காந்த், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Santhanam says Vijay praised his Lollu Sabha spoof movies

இங்க நான் தான் கிங்கு படத்தை புரமோட் செய்யும் விதமாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சந்தானம் லொள்ளு சபாவில் வெளியான ஜல்லியை ரீ ரீலிஸ் செய்யலாம் என்கிற முடிவில் உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி: கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் அவருக்கு வசூல் ரீதியான வெற்றியை தந்தது. ஆனால் அதன் பின்னர் வெளியான 'கிக்' மற்றும் '80ஸ் பில்டப்' படங்கள் பெரிதாகப் போகவில்லை. இந்த ஆண்டு வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் சந்தானம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தை இந்த வாரம் வெளியிட காத்திருக்கிறார் சந்தானம்.

விஜய் பாராட்டினார்: கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 25 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்தை ஸ்பூஃப் செய்து அப்போது சந்தானம் நடிப்பில் வெளியான ஜல்லி எனும் லொள்ளு சபா வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சச்சின் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது, ஜல்லி வீடியோவை பார்த்து விட்டு ரொம்ப சூப்பரா இருந்துச்சு நல்லா சிரிச்சு என்ஜாய் பண்ணேன் என தளபதி விஜய்யே பாராட்டினார் என சந்தானம் கூறியுள்ளார்.

ஜல்லி ரீ ரிலீஸ்: கில்லி படம் ரீ ரிலீஸாகி 30 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்தி வரும் நிலையில், ஜல்லி படத்தையும் ரீ ரிலீஸ் செய்யலாம் என்கிற ஐடியாவில் இருக்கேன் என வழக்கம் போல தனது காமெடி கவுன்ட்டர்களை போட்டு அந்த பேட்டியில் சந்தானம் பேசியுள்ளார். விஜய்யுடன் இணைந்து சச்சின், வேலாயுதம், தலைவா உள்ளிட்ட படங்களில் சந்தானம் காமெடியனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் vs விஜய்குமார்: கடந்த வாரம் கவின் நடித்த ஸ்டார் படத்துடன் சந்தானம் மோதாத நிலையில், இந்த வாரம் உறியடி விஜய் குமார் நடித்துள்ள எலக்சன் திரைப்படத்துடன் சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் வெளியாக உள்ளது. சந்தானத்தின் காமெடி படம் இந்த முறையும் ரசிகர்களை சிரிக்க வைத்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X