Agent Kannayiram Twitter Review: சாதித்தாரா சந்தானம்? ஏஜென்ட் கண்ணாயிரம் ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: தெலுங்கில் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக் தான் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள ஏஜென்ட் கண்ணாயிரம்.
இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள காமெடி டிடெக்டிவ் ஏஜென்ட் திரைப்படமான இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.
சந்தானத்துடன் இணைந்து விஜய் டிவி புகழ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் பதிவிட்டு வரும் விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

ஹீரோ சந்தானம்
நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக ஆன நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், ஒரு சில படங்களை தவிர்த்து பல படங்கள் சந்தானத்துக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில், டோலிவுட் படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என களமிறங்கிய சந்தானத்துக்கு ஏஜென்ட் கண்ணாயிரம் படம் கைகொடுத்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்..

சந்தானம் நடிப்பு பிரமாதம்
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி மற்றும் த்ரில்லர் படமாக வெளியாகி உள்ள சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானம் கடின உழைப்பை போட்டு நடித்திருப்பது தெரிகிறது. அவருக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் என இந்த ரசிகர் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

மொக்கை
நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி படம் என்கிற பெயரில் ஒரு மொக்கை படத்தை கொடுத்துள்ளார். இதுக்கு அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனே தமிழ் டப்பிங்கில் இருக்கு பார்க்கலாம். முதல் பாதி செம மொக்கை என இந்த நெட்டிசன் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரொம்ப போர்
முதல் பாதியோட எந்திரிச்சே வந்துட்டேன். ரொம்ப ஸ்லோவாகவும் போராகவும் படம் போகுது. சந்தானத்திடம் இருந்து எவ்வளவோ சிரிப்பான படத்தை எதிர்பார்த்து போனால் சீரியஸ் காட்சிகள் என மொக்கை போட்டு விட்டார் என இந்த ரசிகரும் படத்தை கழுவி ஊற்றி உள்ளார்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் ரொம்பவே நல்லா இருக்கு என்றும் சந்தானத்தை இப்படியொரு அவதாரத்தில் இதுவரை பார்த்ததே இல்லை என அவரது ரசிகர்கள் தியேட்டருக்கு முன்பாக நடு ரோட்டில் வெடி வெடித்து கொண்டாடும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











