அடிவயிறு அல்சராகிவிடுமளவிற்கு ஒரு சிரிப்பு வெடி... டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: நடிகர் சந்தானம் ஹூரோவாக நடித்த படங்களில் அவருக்கு கைகொடுத்த படம் தான் தில்லுக்கு துட்டு. முதல் இரண்டு பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டிடி ரிட்டன்ஸ் என்ற பெயரில் மூன்றாவது பாகம் உருவாகி உள்ளது.
இதில் சந்தானம்,ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தானத்திற்கு ஜோடியாக நான் வேறமாதிரி பட நடிகை சுரபி நடித்துள்ளார்.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

டிடி ரிட்டன்ஸ்: நடிகர் சந்தானம் தனது காதலி சுரபியை காப்பாற்றுவதற்காக பணத்தை திருடுகிறார். ஆனால், அந்த பணம் பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கிறது. இந்த பணத்தை பேய் பங்களாவிலிருந்து சந்தானம் மீட்டார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.
நல்லா இருக்கு: படம் பார்த்த ஒரு ட்விட்டர் வாசி படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் சந்தானம் நடித்து "DD RETURNS" திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை, மொட்டை ராஜேந்திரன் காமெடி காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், கிராபிக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
3.5 ரேட்டிங்: டிடி ரிட்டன்ஸ் படம் பார்த்தால் பேயுடன் சேர்ந்து சிரிக்கலாம் என்று பதிவிட்டு படத்திற்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார். இத்திரைப்படம் சந்தானத்தின் படமாக இருக்கும் என்று சந்தானம் சொன்னது போல சிக்ஸர் அடித்துவிட்டார் என்று ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சிரிப்பு குறைவில்லை: திரைத்துறை வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது ட்விட்டரில் DD Returns படத்திற்கு 5க்கு 3.2 மதிப்பெண் அளித்துள்ளார். மேலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திகில் நகைச்சுவை வெளியாகி உள்ளது. படம் இடைவேளைக்கு பின் கதை பேய் மாளிகை நகர்ந்து சிரிப்புக்கு குறைவே இல்லை. சந்தானம் நகைச்சுவை முத்திரையுடன் மீண்டும் வந்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
ஒரு சிரிப்பு கூட்டணி: மூத்த சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது ட்விட்டர் பக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,சைக்கோ சகதியில் கோடம்பாக்கத்தையே போட்டு புரட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் அடிவயிறு அல்சராகிவிடுமளவிற்கு ஒரு சிரிப்பு கூட்டணி தந்துள்ள படம்தான் டிடி ரிட்டன்ஸ் என படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











