Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கையில் சீட்டு கட்டு.. வாயில் கேரட்.. சந்தானத்தில் குலு குலு பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
சென்னை : நடிகர் சந்தானம் நடிக்கும் குலு குலு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம்.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சந்தானம்.
விஜய்
தான்
நம்பர்
ஒன்..
தமிழ்
சினிமாவில்
அதிக
சம்பளம்
வாங்கும்
நடிகர்கள்..
டாப்
லிஸ்ட்
இதோ!

சந்தானம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், சக்கப்போடு போடுராஜா, தில்லுக்கு துட்டு, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் சந்தானம். ஏராளமான படங்களில் நடித்த போதும், அனைத்து படங்களுக்கும் ஓர் அளவிற்கு தான் ரீச் கொடுத்தது.

கடைசியா சபாபதி
சந்தானத்தின் நடிப்பில் கடைசியாக சபாபதி வெளியானது. அந்த படம் காமெடி குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகி இருந்தது. ஆனால், அந்த படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம் டைம் ட்ராவல் திரைப்படமாக அமைத்து ஓரளவுக்கு பேசப்பட்டது.

பர்ஸ்ட் லுக்
தற்போது சந்தானம் நடித்துள்ள குலு குலு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் சீட்டு கட்டுடனும்... வாயில் கேரட் வைத்துக்கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார் சந்தானம். அவரின் பின்னால் லாரி ஒன்று கவிழ்ந்து கிடக்கிறது. இந்த போஸ்டரில் சந்தானம் வித்தியாசமாக இருக்கிறார்.

விரைவில் திரையரங்கில்
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள இப்படத்தில் அதுல்யா சந்திரா நாயகியாக நடித்துள்ளார். நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், சேசு ஆகியோர் நடித்துள்ளனர். ஊர், ஊராகச் சுற்றித்திரியும் நபராக சந்தானம் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில், ஜூன் மாதம் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

பல படம் கைவசம்
கண்ணாயிரம், மண்ணவன் வந்தானடி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் சந்தானம் கை வசம் உள்ளனர். மேலும், கன்னட படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கவுள்ள படத்தில் சந்தானம் நடிக்கவிருப்பதாகவும் , இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.