பிரச்சனை முடிஞ்சாச்சாம்.. 3 வருடத்துக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் சந்தானம் படம்.. படக்குழு ஹேப்பி!
சென்னை: சந்தானம் நடித்துள்ள படம், மூன்று வருடத்துக்குப் பிறகு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், 'சர்வர் சுந்தரம்'. ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார்.
சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்த மராத்தி நடிகை வைபவி சாண்டில்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.

உணவின் மேன்மை
கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதாரவி, செஃப் தாமோதரன் உட்பட பலர் நடித்துள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தமிழர்களின் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது.

நாகேஷ் பேரன்
சென்னையில் ஆரம்பிக்கும் கதை, துபாய் வரை சென்று முடிவது போல அமைக்கப் பட்டுள்ளது. நாகேஷ் நடித்த பழைய 'சர்வர் சுந்தரம்' படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர். இதில் நாகேஷ் பேரன் பிஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பல்வேறு பிரச்னை
இந்த படம் மூன்று வருடத்துக்கு முன்பே முடிந்துவிட்டாலும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப் போனது. கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்தனர். பிறகும் தள்ளிப் போனது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, தனது ட்விட்டர் பதிவில் அவ்வப்போது தனது படம் பற்றி பதிவிட்டு வந்தார்.

பொறுப்பில்லாத ஒருவர்
ஒரு பதிவில், இந்தப் படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கும் ரசிகர்களுக்கு, தவறான வியாபாரிகளின் முதிர்ச்சியில்லாத அணுகுமுறை, சம்பந்தமில்லாதவர்களின் தலையீடு, பொறுப்பான நபர்கள் கை கழுவியது, படத்தின் ரிலீஸுக்கு யாரும் உதவத் தயாரில்லை.
பொறுப்பில்லாத ஒருவர் படத்தை வாங்க, பொறுப்புள்ளவர் பொறுப்பில்லாமல் நடப்பதன் பின்விளைவுதான் என்று கூறியிருந்தார்.
Recommended Video

அடுத்த மாதம் ரிலீஸ்
இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட இருப்பதாகக் கூறியிருந்தனர். அது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால், அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இதையடுத்து பிரச்சனைகள் முடிந்து அடுத்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











