சீனியர்கள் ரீஎன்ட்ரி, சர்ச்சை எதிரொலி: சந்தானம் எடுத்த 'அதிரடி' முடிவு
சென்னை: சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் சந்தானம் தனது படங்களில் இனி ஆபாசமாக வசனங்கள் பேசப் போவதில்லையாம்.
தற்போதைக்கு கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்தானம் தான். படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சில படங்களின் விமர்சனங்களை பார்த்தோம் என்றால், படம் சந்தானத்திற்காக தான் ஓடியது என்று எழுதியிருப்பார்கள். அந்த அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்துபவராக உள்ளார்.
அதே சமயம் அவரது வசனங்கள் இரட்டை அர்த்தம் உடையவையாகவே இருக்கும். மேலும் யாரையாவது நக்கலடிக்கும் வகையிலும் இருக்கும். இத்தகைய வசனங்களுக்காக சர்ச்சையில் சிக்கினார் சந்தானம்.

ரசனை... சர்ச்சை
சந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்கள், நக்கல்ஸுகளை இத்தனை நாட்களாக மக்கள் ரசித்தனர். தற்போது அதே மக்கள் அவரது வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா
ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் அவர் பேசிய ஒரு வசனம் பெண்கள் அமைப்புகளை கொதிப்படைய வைத்தது. இதையடுத்து அந்த வசனம் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

கவுண்டமணி, வடிவேலு
சீனியர்களான கவுண்டமணி மற்றும் வடிவேலு ஆகியோர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளனர். இதனால் சந்தானம் கலக்கம் அடைந்துள்ளாராம்.

ஆபாசம்
சீனியர்கள் மறுபிரவேசம் செய்யும் நேரத்தில் சர்ச்சையில் வேறு சிக்கிவிட்டோம். இப்படி போனால் மார்க்கெட் படுத்துவிடும் என்று நினைத்த சந்தானம் இனி தனது படங்களில் ஆபாச வசனங்கள் பேசப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











