Santhanam - சந்தானத்தின் ரியல் லைஃப் பார்த்தா யார் தெரியுமா?.. அவரே பகிர்ந்த தகவல் இதோ

சென்னை: Santhanam (சந்தானம்) நடிகர் சந்தானம் தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் சிம்பு மூலம் திரைத்துறைக்குள் வந்தவர் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகமாகி அதகளம் செய்தவர். அவரது டைமிங் காமெடிகள் அனைத்துமே வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. குறிப்பாக கவுண்டமணி எப்படி டைமிங்கில் அடுத்தவர்களுக்கு பல்பு கொடுப்பாரோ அதே ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்து சிரிப்பு பட்டாசை பற்ற வைத்தார்.

Santhanam Talks about His Real life Friends

சந்தானம் இல்லாமல் ஒரு படம் இல்லை: வடிவேலு பீக்கில் இருந்தபோது எப்படி அவர் இல்லாமல் ஒரு படம்கூட வெளியாகாதோ அதேபோல்தான் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. எந்தப் படத்தில் பார்த்தாலும் சந்தானம் நடித்திருப்பார். அதுமட்டுமின்றி பல படங்கள் சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடிய கதையும், பல அறிமுக ஹீரோக்கள் சந்தானத்தின் துணையோடு முதல் படத்தில் தப்பித்த கதையும் உண்டு.

ஹீரோ சந்தானம்: ஒருகட்டத்தில் காமெடியிலிருந்து விலகி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் பெரிதாக ஓடவில்லை. இருந்தாலும் ஹீரோவாக ஒரு ஹிட்டாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக குலு குலு படம் வெளியானது. அப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதற்கிடையே சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக மாற வேண்டும் என ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்.

சந்தானம் பேட்டி: இந்நிலையில் சந்தானம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது நிஜ வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "என்னுடைய நண்பர் ராஜ்குமார் என்பவர் இருக்கிறார்.. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் பார்த்தா கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் என்னுடைய நண்பர்களில் யார் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்களோ; அதை படத்தில் செய்தால் சிறப்பாக இருக்கும் என தோன்றுகிறதோ அந்தக் கதாபாத்திரத்தை செய்துவிடுவேன்.

Santhanam Talks about His Real life Friends

ராஜ்குமார்: ராஜ்குமார் பேசுவது வேடிக்கையாகவும், சம்பந்தமில்லாமலும் இருக்கும். சமீபத்தில்கூட ஒரு முறை பேசும்போது என்னடா காமெடி எல்லாம் பண்ற, எனக்கு சிரிப்பே வரல என்று என்னை கலாய்த்து பேசினார். அதன் பிறகு ஒருநாள் அவருடைய அப்பா அருகில் இருக்கும் போது ஏன்டா புடலங்காய் என்று என்னை திட்டினார்.

அதற்கு அவர் அப்பா, ஏன் இப்படி எல்லாம் உன் ஃப்ரெண்ட பேசுற என கேட்டார். அவர் இப்படித்தான் எதுவாக இருந்தாலும் ஜாலியாக வேடிக்கையாக பேசுவார். பின் நான் அவனை பார்த்து, உன்னை வைத்து ஒரு படமே பண்ணிவிட்டேன். இன்னும் இதை நீ நிறுத்தவில்லையா? என்றெல்லாம் நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X